ஜீன்ஸ் பேண்ட் யாருக்காக தயாரிக்கப்பட்டது? இதிலுள்ள காப்பர் 'பட்டன்' எதற்காகனு தெரியுமா?
ஜீன்ஸ் பேண்ட் பாக்கெட்டுகளில் செம்பு பட்டன்களை வைத்திருப்பதற்கான காரணம் என்ன என்பதை இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்
இன்றைய காலத்தில் ஜீன்ஸ் பேண்ட்டை ஆண், பெண் வேறுபாடு இல்லாமல் அணிந்து வருகின்றனர்.
சிறுவர்கள் மட்டுமின்றி முதியவர்கள் வரை அனைவரும் அணிந்துவரும் ஜீன்ஸ் பேண்டை அடிக்கடி சலவை செய்ய வேண்டிய அவசியமும் இல்லை.
இரண்டு அல்லது மூன்று முறை அணிந்த பின்பு துவைத்து கொள்ளலாம். வியர்வை போன்ற ஈரப்பதம் காணப்பட்டால், அதனை காய வைத்து அணிய வேண்டும். இந்த ஆடையில் மற்றொரு சிறப்பம்சம் என்னவென்று தெரிந்து கொள்வோம்.
ஜீன்ஸ் பேண்ட் எதற்கு?
ஜீன்ஸ் பேண்ட் பாக்கெட்டில் செம்பு மற்றும் தாமிரம் அல்லது காப்பர் பட்டன்கள் இருப்பதை அவதானித்திருப்போம்.
ஜீன்ஸில் பிளாஸ்டிக் அல்லது இரும்பு பட்டன்கள் வைக்காமல் ஏன் செம்பு பட்டன் வைக்கிறார்கள் என்று நாம் யோசனை செய்திருப்போம்.
ஜீன்ஸில் பெல் பாட்டம், டைட், ஸ்ட்ரெய்ட், ஸ்கின்னி, ரிப்ட், ஃபேட் போன்ற வகைகள் காணப்படுகின்றது.
ஜீன்ஸ் பேண்ட்டை ஜேக்கப் டேவிஸ் என்பவர் தான் வடிவமைத்துள்ளார். 19ம் நூற்றாண்டில் விவசாயிகளுக்காகவே இந்த ஆடையை தயாரித்துள்ளார்.
விவசாய நிலத்தில் இறங்கி கூலி வேலை செய்பவர்களின் ஆடைகள் அடிக்கடி கிழிந்து விடுகின்றது. பல சமயங்களில் அவர்களால் புதிய ஆடைகளை வாங்க முடியவில்லை. இதனைத் தவிர்க்க நினைத்த டேவீஸ் சீக்கிரம் கிழியாத துணியால் ஆடைகளை தயார் செய்ய நினைத்து, டெனிம் துணியால் ஜீன்ஸ் பேண்ட் தயாரித்துள்ளார்.
செம்பு பட்டன் எதற்கு?
ஜீன்ஸ் பேண்டில் அதிக பாக்கெட் வைக்க முடிவு செய்த இவர், அதிக அழுத்தம் காணமாக கிழிந்துவிடும் என்று நினைத்துள்ளார். ஆதலால் அழுத்தம் அதிகமாக ஏற்படும் இடங்களில் பாக்கெட்டுகளை தனியாக வைத்து அதனை இணைக்க காப்பர் பட்டன்களை வைத்துள்ளனர்.
காப்பர் உறுதியான உலோகம் என்பதால் அந்த வகை பட்டன் வைத்த ஜீன்ஸ் அதிக காலம் நீடித்தது. அதுமட்டுமின்றி துணியின் பல்வேறு பகுதிகளை உறுதியாக்க காப்பர் பட்டன்கள் பயன்படுத்தப்பட்டன. இதனால் பேண்ட்கள் எளிதில் கிழியவில்லை.
இவை வெறுமனே ஆடைகளை உறுதியாக்குவது மட்டுமின்றி கவர்ச்சியான தோற்றத்தையும் கொடுக்கின்றது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |