அவங்க மேல எனக்கு அவ்வளவு லவ் - மனம் திறந்து பேசின ஜெயம் ரவி
அவங்க மேல எனக்கு அவ்வளவு லவ் என்று நடிகர் ஜெயம் ரவி மனம் திறந்து பேசியுள்ளார்.
நடிகர் ஜெயம் ரவி
தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வருபவர் நடிகர் ஜெயம் ரவி. இவருக்கென்று தனி ரசிகர் பட்டாளமே உள்ளது. இவருடைய இயற்பெயர் ரவி. ஆனால், இவர் முதன் முதலாக ‘ஜெயம்’ படத்தில் நடித்ததால் ஜெயம் ரவி என்று மாற்றிக்கொண்டார்.
இதனையடுத்து, எம் குமரன் சன் ஆப் மகாலட்சுமி, போகன், சந்தோஷ் சுப்பிரமணியன், தனி ஒருவன், திக் திக் திக் உட்பட பல படங்களில் நடித்துள்ளார். தற்போது ஜெயம் ரவி நடித்துள்ள ‘பொன்னியின் செல்வன்’ 2ம் பாகம் திரையரங்குகளில் வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.
மனம் திறந்து பேசின ஜெயம் ரவி
ஒரு பிரபல சேனலுக்கு ஜெயம் ரவி பேட்டி கொடுத்தார்.
அப்போது அந்த பேட்டியில் நதியா ஜெயம் ரவிக்கு சர்ப்ரைஸ் செய்ய போன் செய்தார். அந்த நேரம், ஹலோ என்று நடிகை நதியா பேசினதும், உடனே ஜெயம் ரவி, போனில் பேசிய நதியானை உடனே கண்டுபிடித்துவிட்டார்.
உடனே நதியா... ரவி நான் உங்களுக்கு சர்பிரைஸ் பண்ணலாம்ன்னு பார்த்தா.. கண்டுபிடிச்சு விட்டீங்களே என்று சொல்ல, அதற்கு ரவி... மூச்சுவிட்டா கூட நீங்க யாருன்னு நான் கண்டுபிடிச்சு விடுவேன். ஏன்னா... உங்க மேல எனக்கு அவ்வளவு லவ் இருக்கு. நீங்க எவ்வளவு பெரிய லெஜண்ட் என்று ரவி கூற, அதற்கு நதியா... அப்படி இல்லை ரவி.. நீங்க சிறந்த நடிகர். உங்க கூட நடித்ததை நான் எப்போமே மறக்க மாட்டேன்.
அப்போது ரவி... பொன்னியின் செல்வம் பகுதி 1 சூப்பர் ஹிட். ஏன்னா... நீங்க செட்டிற்கு வந்ததால்தான் சூப்பர் ஹிட்டடித்தது என்று கூற, அதற்கு நடிகை நதியா போனில் சிரித்துவிட்டார். தற்போது இது தொடர்பான வீடியோ இணையதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.