ஜெயம் ரவி விவாகரத்து வழக்கில் ஆர்த்தியால் திருப்பம்... என்ன நடந்தது?
நடிகர் ஜெயம் ரவி தாக்கல் செய்த விவாகரத்து வழக்கு நேற்று சென்னை குடும்ப நல நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
வழக்கை விசாரித்த நீதிபதி ஜெயம் ரவி மற்றும் அவரது மனைவி ஆர்த்தியுடன் சமரச தீர்வு மையத்தில் பேச்சுவார்த்தை நடத்த உத்தரவிட்டார்.
ஜெயம் ரவி
ஜெயம் ரவி, தமிழ் சினிமா முன்னணி நடிகர்களின் பட்டியலில் ஒருவராக வலம் வருகின்றார். இவர் நடிப்பில் வெளியான அனைத்து படங்களும் தனித்துவமான பாணியில் இருப்பதால் இவருக்கென தனி ரசிகர் பட்டாளமே இருக்கின்றது.
கடந்த 2009ம் ஆண்டு ஆர்த்தி என்பவரைக் காதலித்து திருமணம் செய்து கொண்டார். ஆர்த்தியும் சினிமா குடும்பத்தை சேர்ந்தவர் தான்.
அவரது தாய் சுஜாதாவும் சொந்தமாக தயாரிப்பு நிறுவனம் ஒன்றினை நடத்தி வருகின்றார்.
இந்த தம்பதிகளுக்கு இரண்டு மகன்கள் உள்ள நிலையில், இருவரும் பிரிய உள்ளதாக சமீபத்தில் தகவல் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இந்நிலையில் ரவி தாக்கல் செய்த விவாகரத்து வழக்கு நேற்று சென்னை குடும்ப நல நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
ஜெயம் ரவி ஆஜரான நிலையில் ஆர்த்தி தனக்கு உடல்நிலை சரியில்லாததால் இன்றைய தினம் பேச்சு வார்த்தைக்கு வர முடியவில்லை என்றும் பேச்சு வார்த்தையை தள்ளிவைக்க வேண்டும் எனவும் சமரச தீர்வு மையத்திடம் கேட்டுக்கொண்டுள்ளார்.
சமரச பேச்சுவார்த்தைக்கு ஆர்த்தி வராததால், வழக்கை நவம்பர் 27ஆம் திகதிக்கு தள்ளிவைத்து சமரச தீர்வு மையம் உத்தரவிட்டுள்ளது.
viral video: நட்புக்காக சம்பளமே வாங்காத நயன்தாராவிடம் நட்டஈடு கேட்ட தனுஷ்... கொந்தளிக்கும் ரசிகர்கள்
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |