மஞ்சள் காமாலை நோயின் அறிகுறிகள் என்ன? வராமல் தடுப்பது எப்படி?
குழந்தைகள் முதல் பெரியவர்களை அனைவரையும் எளிதில் தாக்கும் மஞ்சள் காமாலை நோயின் அறிகுறிகளை இங்கு தெரிந்து கொள்வோம்.
மஞ்சள் காமாலை
மஞ்சள் காமாலை என்பது தோல் மற்றும் கண்களின் வெள்ளை நிறத்தின் மஞ்சள் நிறமாகும். புதிதாகப் பிறந்த குழந்தைகளில் மஞ்சள் காமாலை மிகவும் பொதுவான நோயாக இருக்கின்றது.
பின்பு குழந்தை பிறந்த இரண்டு வாரங்களுக்குள் சரியாகிவிடும். ஆனால் வளர்ந்த குழுந்தைகளுக்கு மஞசள் காமாலை பாதிப்பு என்பது சாதாரணமாக கருதப்படுவதில்லை.
image: iStock.com
பொதுவாக மஞ்சள் காமாலை நோய்த்தொற்றானது பித்த அதிகரிப்பால் வருகிறது. பித்தமானது பல காரணங்களால் மிகுதியாகி ரத்தத்தில் கலந்து விடுவதால் மஞ்சள் காமாலை நோய் ஏற்படுகிறது.
பித்தமானது அலர்ஜியாகும்போது காமாலை நோய்க் கிருமி தோன்றி, முதலில் கல்லீரலைப் பாதித்து, கண்களில் மஞ்சள் நிறம் தோற்று விக்கிறது. சிறுநீர் மஞ்சளாக வெளியேறுகிறது.
பொதுவாக மஞ்சள்காமாலைக்கு பித்தம் அதிகரிப்புதான் முக்கிய காரணமாகிறது. மஞ்சள் காமாலை நோயால் பாதிக்கப்பட்ட ஒருவர் சிறுநீர், மலம் கழித்த இடத்தை மற்றவர்கள் பயன்படுத்தினால் அவர்களையும் நோய்த் தொற்ற வாய்ப்புண்டு.
கல்லீரலுக்கும், மஞ்சள் காமாலைக்கும் என்ன சம்பந்தம்?
மனித உடலின் மிக முக்கிய உள்உறுப்பாக இருப்பது கல்லீரல் தான். உடம்பில் நடைபெறும் வளர்சிதை மாற்றங்களின் நச்சுத்தன்மையை அகற்றுதல், செரிமானத்திற்கு தேவையான உயிர்வேதியியல் பொருட்களை உற்பத்தி செய்தல் என முக்கிய வேலையை செய்கின்றது.
மேலும் ரத்தத்தில் உள்ள புரதம், கொழுப்பு, சர்க்கரை ஆகியவற்றைச் சீராக வைத்துக்கொள்வதும் கல்லீரல் தான். ஆதலால் உடம்பில் மற்ற உறுப்புகளை விட இது தனித்தன்மை வாய்ந்தது ஆகும்.
மேலும் இது இழந்த திசுக்களை தானே மீட்டுருவாக்கம் செய்துக்கொள்ளக்கூடிய ஆற்றலைப் பெற்றிருக்கிறது. 75 சதவிகிதம் பாதிப்புக்குள்ளானாலும் கூட தன் வேலைகளைத் தொடர்ந்து செய்துகொண்டே தான் இருக்கும். ஆனால் கல்லீரல் பாதியளவு பாதிக்கப்பட்டால் தான் இதன் அறிகுறிகளே வெளியில் தெரியவரும்.
ஒருசில அறிகுறிகளில் முக்கியமான அறிகுறி தான் இந்த மஞ்சள் காமாலை ஆகும். அதாவது கல்லீரல் ஒழுங்காகச் செயல்படாததால் ஏற்படக்கூடிய மஞ்சள் காமாலை, கல்லீரலிலிருந்து பித்தம் வெளியேறாமல் தேங்கிவிடுவதால் வரக்கூடிய மஞ்சள் காமாலை என இரண்டு விதமாக மருத்துவர்கள் பார்க்கின்றனர்.
கல்லீரலிலிருந்து பித்தம் வெளியேறி, பித்தப்பைக்குச் சென்று சேர்ந்து, பித்தக்குழாய் வழியாகக் குடலுக்குச் சென்றுவிட வேண்டும். அப்படிச் செல்லாமல் கல்லீரலிலேயே தேங்கிவிட்டால் மஞ்சள் காமாலை உண்டாகும்.
அறிகுறிகள் என்ன?
மஞ்சள் காமாலை முதலில் கண்ணில்தான் வெளிப்படுகிறது. கண்களில் மிகவும் மெல்லிய வெள்ளை நிறப் பகுதி ஸ்க்லீரா. பிளிருபின் அதிகமாக இருந்தால் ஸ்க்லீரா பாதிக்கப்பட்டு மஞ்சள் நிறத்துக்கு மாறும்.
கண்ணில் மஞ்சள் காமாலை வந்திருப்பதைக் கண்டறிய பாதிக்கப்பட்டவரை இயற்கை வெளிச்சத்தில் வைத்துப் பரிசோதிப்பதே சிறந்த முறை. செயற்கை விளக்கொளியில் கண்டறிவதில் தாமதம் ஏற்படும்.
GETTY IMAGES
நாக்கு, மேல் அன்னம், உள் உதடு, கைகள் போன்றவற்றில் மஞ்சள் நிறப் புள்ளிகள் தோன்றும். பித்தநீர் சரியாக வெளியேறாது. எனவே, பித்த உப்பு உடலில் தங்கிவிடும். பிளிருபின், பித்த உப்புடன் சேர்ந்தால், தோலில் அரிப்பு ஏற்படும்.
பசியின்மை, உணவைப் பார்த்தாலோ, உணவு வாசனையை நுகர்ந்தாலோகூட குமட்டல் உணர்வு மற்றும் வாந்தி இருக்கும்.
அடர் நிற சிறுநீர் மற்றுமு் வெளிர் அல்லது களிமண் நிற மலம். வயிறு வலி கணிக்க முடியாத எடை இழப்பு தசை மற்றும் மூட்டு வலி. அதிக காய்ச்சல் குளிர் என இந்த அறிகுறிகள் தென்பட்டால் மஞ்சள் காமாலையாக இருக்கலாம்.
இதற்கான பரிசோதனை என்ன?
சிலர் பிளிருபின் பரிசோதனை மட்டும் செய்துகொண்டு சுய சிகிச்சை எடுத்து வருவதை செய்துவரும் நிலையில், இது தவறாகும். கல்லீரல் செயல்பாட்டுக்கான முழுப் பரிசோதனை (LFT) செய்ய வேண்டும்.
ஹெபடைடிஸ் வைரஸ் ஆன்டிபாடிகள், பிலிரூபின் அளவுகள், அசாதாரண இரத்த சிவப்பணுக்கள் மற்றும் கல்லீரல் செயல்பாட்டைக் குறிக்கும் பிற பொருட்கள் ஆகியவற்றைச் சரிபார்க்க ஒரு கண்டறியும் இரத்தப் பரிசோதனையும் செய்யப்படலாம்.
மஞ்சள் காமாலைக்கான காரணத்தைக் கண்டறிய அல்ட்ராசவுண்ட் அல்லது பயாப்ஸி போன்ற பிற கண்டறியும் சோதனைகளும் பரிந்துரைக்கப்படலாம்.
ஆண்டுக்கு ஒரு முறை மாஸ்டர் ஹெல்த் செக் அப் செய்யும்போது, கல்லீரல் முழுமையாகச் சோதனை செய்யப்படும். இதனால், பாதிப்புகளை ஆரம்பநிலையிலேயே கண்டறிந்து குணப்படுத்த முடியும்.
வீட்டு வைத்தியம் என்ன?
கீழாநெல்லி - ஒரு கைப்பிடி
சீரகம் - 1 ஸ்பூன்
இரண்டையும் நீர்விட்டு அரைத்து கஷாயம் செய்து காலை, மாலை இருவேளையும் கொடுத்து வந்தால் பித்தம் தணிந்து, காமாலை நோய்த்தொற்று கிருமிகள் அழியும்.
இரண்டாவது மருந்தாக, கீழாநெல்லி, சுக்கு, மிளகு, சீரகம், சோம்பு, மஞ்சள் இவற்றை சம அளவு எடுத்து தண்ணீரில் கொதிக்க வைத்து, சர்க்கரை கலந்து 4 மணி நேரத்திற்கு ஒரு முறை அருந்தி வந்தால் மெல்ல மெல்ல முழுமையாக குணமடையலாம்.
Thyroid symptoms: நாள்பட்ட நோய்களை உண்டுபண்ணும் தைராய்டு சுரப்பி- இந்த அறிகுறிகள் இருந்தால் ஜாக்கிரதை
மூன்றாவதாக கீழாநெல்லி, சீரகம், பூவரச பழுத்த இலை, வெள்ளை கரிசலாங்கண்ணி இவை அனைத்தும் 3 கிராம் அளவிற்கு எடுத்துக் கசாயம் செய்து காலை, மாலை வேளைகளில் சாப்பிடும் முன் அருந்தினால் காமாலை நோய் குணமாகும்.
வராமல் தடுப்பது எப்படி?
காய்ச்சல், குளிர்சுரம் வந்தால், பித்தத்தை அதிகப்படுத்தும் உணவுகளை தவிர்ப்பது நல்லது.
பித்தத்தைத் தணிக்க, காய்கள், கீரைகள், பழவகைகளை அதிகம் உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும்.
வாரம் ஒருமுறை எண்ணெய் தேய்த்து குளிக்க வேண்டும்.
எண்ணெயில் பொரிக்கப்பட்ட உணவுகளை தவிர்க்க வேண்டும்.
நாள்பட்ட உணவுகளை சூடாக்கி சாப்பிடுவதைத் தவிர்க்க வேண்டும்.
மழைக்காலங்களில் நீரை கொதிக்க வைத்து ஆறிய பின் அருந்தவேண்டும்.
Getty Images
புளி, உப்பு, காரம் குறைத்து சாப்பிட வேண்டும். எண்ணெய்ப் பலகாரங்களையும், அதிக எண்ணெய் சம்பந்தப்பட்ட பொருள்களையும் தவிர்க்க வேண்டும். கட்டாயம் ஓய்வு எடுக்க வேண்டும்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |