விஜயை பெருமையாகப் பேசிய மகன் ஜேசன் சஞ்சய் - வைரலாகும் பேட்டி

Tamil Cinema jason sanjay C Joseph Vijay
By Vinoja Aug 01, 2026 10:54 AM GMT
Report

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராகப் பல ஆண்டுகள் ரசிகர்களின் மனதில் இடம்பிடித்த விஜய், தற்போது தமிழக முதலமைச்சராகப் பொறுப்பேற்று செயல்பட்டு வருகிறார். அரசியலில் முழு கவனம் செலுத்தி வரும் அவரின் குடும்பத்தினரும் அவ்வப்போது பொதுமக்களின் கவனத்தை ஈர்த்து வருகின்றனர்.

இந்நிலையில், விஜய்யின் மகனான ஜேசன் சஞ்சய், நடிகராக அல்லாமல் இயக்குநராகத் தனது திரைப்பயணத்தைத் தொடங்கியுள்ளார். அவரது இயக்கத்தில், நடிகர் சந்தீப் கிஷன் கதாநாயகனாக நடித்துள்ள 'சிக்மா' திரைப்படம் உருவாகியுள்ளது.

விஜயை பெருமையாகப் பேசிய மகன் ஜேசன் சஞ்சய் - வைரலாகும் பேட்டி | Jason Sanjay Talk About Dad Cm Vijay Viral

என் புள்ளைக்கு 10 லட்சம் சம்பளம்.. ஆனா நா முதியோர் இல்லத்தில்: நடிகரின் கண்ணீர் பேட்டி

என் புள்ளைக்கு 10 லட்சம் சம்பளம்.. ஆனா நா முதியோர் இல்லத்தில்: நடிகரின் கண்ணீர் பேட்டி

இந்தப் படம் வருகிற செப்டம்பர் 18 ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாக உள்ளது. படத்தின் வெளியீட்டை முன்னிட்டு ஜேசன் சஞ்சய் பல்வேறு ஊடகங்களுக்கு பேட்டியளித்து வருகிறார்.

அப்பாதான் என் முதல் தேர்வு

அவ்வகையில், ஒரு நிகழ்ச்சியில் அவரிடம் சுவாரஸ்யமான கேள்வி ஒன்று முன்வைக்கப்பட்டது. அதில், "உங்கள் பெயரைக் கொண்ட ஹாலிவுட் நடிகர் ஜேசன் ஸ்டேதம், 'சிக்மா' படத்தைப் பார்த்துவிட்டு, 'தம்பி, வாங்க... ஹாலிவுட்டில் ஒரு படம் பண்ணலாம்' என்று அழைத்தால், இந்தியாவில் இருந்து எந்த நடிகரை அவருடன் இணைத்து அழைத்துச் செல்வீர்கள்?" என்று கேட்கப்பட்டது.

விஜயை பெருமையாகப் பேசிய மகன் ஜேசன் சஞ்சய் - வைரலாகும் பேட்டி | Jason Sanjay Talk About Dad Cm Vijay Viral

இதற்கு சற்றும் யோசிக்காமல் பதிலளித்த ஜேசன் சஞ்சய், "எனக்கு முதலில் நினைவுக்கு வருவது அப்பாதான் (விஜய்). அவர்கள் இருவரும் இணைந்தால் அது மிகச் சிறப்பான கூட்டணியாக இருக்கும். நான் இப்போது சொன்ன இந்தப் பதிலை நடிகர் ஜேசன் ஸ்டேதம் பார்த்தால் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கும்," என்று சிரித்தபடியே தெரிவித்தார்.

அதே பேட்டியில், தனது சிறுவயது நினைவுகளையும் ஜேசன் சஞ்சய் பகிர்ந்துகொண்டார். குறிப்பாக, ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகள் சென்னை நகரில் நடைபெற்றபோது, தனது தந்தை விஜய்யின் தோளில் அமர்ந்தபடி போட்டியை ரசித்த அனுபவம் இன்னும் மறக்க முடியாத நினைவாக இருப்பதாக கூறினார்.

விஜயை பெருமையாகப் பேசிய மகன் ஜேசன் சஞ்சய் - வைரலாகும் பேட்டி | Jason Sanjay Talk About Dad Cm Vijay Viral

49 வயதில் 25 இல் ஆடிய அதே பாடலுக்கு மேடையில் குத்தாட்டம் போட்ட சிம்ரன்! வைரலாகும் வீடியோ

49 வயதில் 25 இல் ஆடிய அதே பாடலுக்கு மேடையில் குத்தாட்டம் போட்ட சிம்ரன்! வைரலாகும் வீடியோ

தனது குழந்தைப் பருவ அனுபவங்களையும், தந்தையுடனான பாசப்பிணைப்பையும் அவர் அப்போது மனம் திறந்து பகிர்ந்துகொண்டார். தனது தந்தை விஜய் பற்றி ஜேசன் சஞ்சய் பெருமையாக கூறியவை சமூக வலைத்தளங்களில் வைராலகி வருகின்றது.

விஜயின் மனைவி சங்கீதா விவாகரத்து  கேட்டு மனு தாக்கல் செய்ததையடுத்து விஜய்க்கும் அவரின் பிள்ளைகளுக்கும் இடையே உறவு கசப்பாக மாறியுள்ளதாக  சில தகவல்கள் வெளியாகி வரும் நிலையில்,  ஜேசன் சஞ்சய் இவ்வாறு பேசியிருப்பது பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW


மரண அறிவித்தல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

குப்பிழான், Ajax, Canada

22 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, காங்கேசன்துறை, London, United Kingdom

20 Sep, 2025
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளிவாய்க்கால், புதுக்குடியிருப்பு

11 Oct, 2016
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Neuilly-Plaisance, France

18 Sep, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம் கிழக்கு, சுழிபுரம்

18 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
7ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Toronto, Canada

20 Sep, 2023
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna

14 Sep, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், Landau, Germany

20 Sep, 2025
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
அகாலமரணம்
36ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US