வெள்ளையாக குழந்தை பிறந்தால் மரணதண்டனை! நம்பமுடியாத உண்மை
ஜாரவா பழங்குடியினர் அந்தமான் நிக்கோபார் தீவுகளில் தெற்கு அந்தமான் மற்றும் நடு அந்தமானில் வாழும் பழங்குடி மக்களில் ஒரு பிரிவினர். ஜாரவா எனும் சொல்லிற்கு “மண்ணின் மைந்தர்கள்” என்று பொருள்.
இவர்களின் மரபணு சோதனையில் இவர்கள் பசிபிக் தீவைச் சேர்ந்தவர்கள் என்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அந்தமான் இந்தியாவின் ஒரு பகுதியாக இருந்தாலும் இந்தியர்களின் மரபணு இவர்களின் உடலில் இல்லை. ஜாராவா பழங்குடி மக்களின் எண்ணிக்கை 250 முதல் 400 வரை இருக்கும் என கணக்கிட்டுள்ளனர்.
வெளி உலக தொடர்பின்றி தனிமையில் வாழும் தெற்கு அந்தமான் மற்றும் நடு அந்தமானின் மேற்கு பகுதியில் உள்ள அடர்ந்த காட்டில் வாழும் ஜாரவா மக்கள் விலங்குகளையும் அந்தமான் கடலில் மீன்களையும் வேட்டையாடி உண்டு வாழ்கின்றனர்.
மேலாடையின்றி வாழும் இம்மக்களின் எண்ணிக்கை பல்வேறு காரணங்களால் தொடர்ந்து குறைந்து கொண்டே வருகின்றது. ஜாரவா பழங்குடி மக்களை இந்திய அரசு பட்டியல் பழங்குடி மக்கள் இனத்தில் சேர்த்துள்ளது.
மேலும் இப்பழங்குடியின மக்களை பாதுகாக்க வேண்டிய மக்களாக இந்திய அரசு அறிவித்துள்ளது.