இந்த வாழைப்பழத்தை தோலுடன் சாப்பிடலாமா! விலை என்னன்னு தெரியுமா?
பொதுவாகவே எல்லா காலங்களிலும் மலிவு விலையில் கிடைக்கக்கூடிய பழங்களின் பட்டியலில் வாழைப்பழம் முக்கிய இடம் வகிக்கின்றது. தினமும் வாழைப்பழம் சாப்பிடுவதால் எண்ணற்ற நன்மைகள் கிடைக்கும் என்பது நாம் அனைவரும் அறிந்ததே.
வாழைப்பழம் சாப்பிட்ட பின்னர் அனைவரும் அதன் தோலை தூக்கி எரிந்து விடுவார்கள். ஆனால் ஒரு நாட்டில் விளைவிக்கப்படும் வாழைப்பழத்தை தோலுடன் சாப்பிடலாம் என்றால் உங்களால் நம்பமுடிகின்றதா?

ஆம், ஜப்பானில் 'உறைய வைத்து வளர்த்தல்' (Freeze-thaw method) என்ற நுட்பத்தைப் பயன்படுத்தி உருவாக்கப்படும் ஒரு வகை வாழைப்பழத்தை தோலுடன் சாப்பிட முடியும்.
விலை என்ன தெரியமா?
குறைந்த வெப்பநிலையில், வளர்க்கப்படுவதன் காரணமாக இதன் தோல் மிகவும் மெல்லியதாக இருக்கின்றது.

அப்படி தோலை உரிக்காமல் சாப்பிடக்கூடிய வாழைப்பழம் தான் "மோங்கே" (Mongee) வாழைப்பழம். இதன் தோல் மற்ற வாழைப்பழங்களை போல் இல்லாமல், மிகவும் மெல்லியதாகவும் இனிப்பு சுவை கொண்டதாகவும் இருக்கும்.
பொதுவாக எல்லா வாழைப்பழத் தோல்களிலும் நார்ச்சத்து, வைட்டமின் போன்ற சத்துக்கள் நிறைந்துள்ளன, ஆனால் கசப்புத்தன்மை காரணமாக அதன் தோலை வீசிவிடுகின்றோம்.

ஆனால் ஜாப்பானில் மட்டுமே விளைவிக்கப்படுகின்ற இந்த வாழைப்பழத்தின் தோல் வாழைப்பழத்துக்கு நிகராக சுவையை கொண்டிருக்கும்.
அதன் ஒரு பழத்தின் விலை 6 டொலர்களாகும் அதாவது இந்திய மதிப்பில் சுமார் 550 ரூபாய் என்பது குறிப்பிடத்தக்கது.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |