இணையத்தில் லீக்கான ‘ஜனநாயகன்’ - இத்தனை கோடி பேர் பார்த்ததாக காவல்துறை அதிர்ச்சி தகவல்!
சட்டவிரோதமாக இணையத்தில் வெளியான “ஜனநாயகன்” திரைப்படத்தை இதுவரை சுமார் 1.20 கோடி பேர் பார்த்துள்ளதாக காவல்துறை தரப்பில் அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
இந்த விவகாரம் தொடர்பாக 21 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்ட நிலையில், அதில் இருவர் ஜாமீன் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தனர். ஆனால், “ஜாமீன் வழங்கப்பட்டால் முக்கிய ஆதாரங்கள் கலைக்கப்பட வாய்ப்பு உள்ளது” என காவல்துறை வலியுறுத்தியதைத் தொடர்ந்து, நீதிமன்றம் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்தது.

ஜனநாயகன்
2026ஆம் ஆண்டில் விஜய் நடிப்பில் வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்ட ஜனநாயகன் படம், வெளியானால் பாக்ஸ் ஆபிஸை அதிரவைக்கும் என ரசிகர்கள் நம்பிக்கையுடன் காத்திருந்தனர்.
மலேசியாவில் நடந்த படத்தின் ஆடியோ வெளியீடு விழாவையே ரசிகர்கள் பிரம்மாண்டமாக கொண்டாடியிருந்தது குறிப்பிடத்தக்கது.

ஆனால் தணிக்கை சான்றிதழ் பெறுவதில் ஏற்பட்ட சிக்கல்களால் படம் அதிகாரப்பூர்வமாக வெளியாகாமல் போனது. பின்னர் சமீபத்திய தகவல்படி, படத்திற்கு “A” சான்றிதழ் வழங்கப்பட்டதாக கூறப்படுகிறது.
ரசிகர்களின் எதிர்பார்ப்பு மத்தியில் லீக் அதிர்ச்சி
முதலமைச்சராக விஜய் பதவியேற்ற செய்தியால் உற்சாகத்தில் இருந்த ரசிகர்கள், அவரது ஜனநாயகன் படத்தை திரையில் காண ஆவலுடன் காத்திருந்த நிலையில், படம் இணையத்தில் சட்டவிரோதமாக கசிந்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

கணவர் Gay! திருமணத்திற்குப் பிறகு வெளிவந்த ரகசியம்: தம்பதியின் வித்தியாசமான முடிவுக்கு குவியும் பாராட்டு
இதையடுத்து தயாரிப்பு நிறுவனம் அளித்த புகாரின் பேரில், சென்னை சைபர் கிரைம் போலீசார் நடவடிக்கை எடுத்து 21 பேர் மீது வழக்குப்பதிவு செய்து சிலரை கைது செய்துள்ளனர்.கைது செய்யப்பட்டவர்களில் ரஜினி, ஜெயப்பிரகாஷ் ஆகியோர் ஜாமீன் கோரி மனுத்தாக்கல் செய்திருந்தனர்.
இந்த மனு விசாரணைக்கு வந்தபோது, படம் இணையத்தில் கசிந்த பிறகு இதுவரை 1 கோடியே 20 லட்சம் பேர் பார்த்துவிட்டதாக காவல்துறை தெரிவித்த தகவல் நீதிமன்றத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |