முதல்வர் விஜய்யின் ‘ஜன நாயகன்’ எப்போது ரிலீஸ் தேதி அறிவிப்பு - குஷியில் ரசிகர்கள்
தற்போதைய தழழக முதல்வரும் முன்னாள் நடிகருமான விஜய் நடிப்பில் உருவாகி பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள ‘ஜன நாயகன்’ திரைப்படத்தின் வெளியீட்டு தேதியை படக்குழு அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.
பல்வேறு காரணங்களால் தள்ளிப்போன இந்தப் படம், தற்போது ரசிகர்களின் நீண்டகால எதிர்பார்ப்புக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இந்த தகவல் தற்போது இணையத்தில் வைரலாகியுள்ளதுடன் ரசிகர்களை குஷியில் ஆழ்த்தியுள்ளது.

ஜனநாயகன்
ஹெச். வினோத் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்தப் படத்தில் விஜய்க்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடித்துள்ளார். மேலும் மமிதா பைஜூ, பிரியாமணி உள்ளிட்ட பல முக்கிய நட்சத்திரங்கள் நடித்துள்ளனர்.
அதேபோல் பிரகாஷ் ராஜ், கௌதம் வாசுதேவ் மேனன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருப்பது படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.அனிருத் இசையமைத்துள்ளார்.

கேவிஎன் புரொடக்ஷன் நிறுவனம் தயாரித்துள்ள இந்தப் படம், விஜய்யின் திரைப்பயணத்தில் முக்கியமான படமாகவும் இறுதி படமாகவும் பார்க்கப்படுகின்றது.
முதலில் இப்படம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு கடந்த ஜனவரி மாதம் திரையரங்குகளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், சென்சார் தொடர்பான பிரச்சினைகள் காரணமாக திட்டமிட்ட தேதியில் படத்தை வெளியிட முடியாத நிலை ஏற்பட்டது.

சென்சார் சான்றிதழ் தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் இருந்ததுடன், சான்றிதழ் வழங்குவதிலும் தாமதம் ஏற்பட்டது. இதற்கிடையில், நடிகர் விஜய் அரசியல் களத்தில் கால் பதித்து, சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்று தமிழக முதல்வராகவும் பொறுப்பேற்றார்.

எப்போது ரிலீஸ்?
இந்நிலையில், கடந்த வாரம் இப்படத்திற்கு சென்சார் சான்றிதழ் வழங்கப்பட்டது. ‘ஜன நாயகன்’ திரைப்படம் ‘A’ சான்றிதழை பெற்றுள்ளது. இதனைத் தொடர்ந்து, விஜய் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து வந்த ‘ஜன நாயகன்’ திரைப்படம் வரும் ஜூலை 23-ம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகும் என படக்குழு அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.
நீண்ட இடைவெளிக்குப் பிறகு வெளியாகும் விஜய்யின் இந்தப் படம் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெறுமா என்ற எதிர்பார்ப்பு தற்போது அதிகரித்துள்ளது.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |