ஜனநாயகன் படத்தில் விஜயின் மகளாக நடித்த லிதன்யாவின் Home tour
முதல்வர் விஜய் நடிப்பில் வெளியாகியுள்ள கடைசி திரைப்படம் ஜனநாயகன்.
ஹெச். வினோத் இயக்கியுள்ள இந்தப் படம், கடந்த ஜனவரி மாதமே வெளியாக வேண்டிய நிலையில், சென்சார் சான்றிதழ் தொடர்பான பிரச்சனை காரணமாக படத்தின் வெளியீடு தாமதமானது.
இந்நிலையில், நடிகர் விஜய்யின் 69வது திரைப்படமான ஜனநாயகன் கடந்த 23ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியானது.
கே.வி.என். புரொடக்ஷன்ஸ் நிறுவனம் சுமார் ரூ.500 கோடி பட்ஜெட்டில் இந்த படத்தை தயாரித்துள்ளது.
மேலும், அனிருத் இசையமைப்பில் வெளியான இந்த படத்தில், பூஜா ஹெக்டே, பாபி தியோல், மமிதா பைஜு உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.
இந்நிலையில், ஜனநாயகன் படத்தில் நடிகர் விஜய்யின் மகளாக குழந்தை நட்சத்திரமாக லிதன்யா நடித்துள்ளார். இவர் செல்லமே செல்லமே, சுந்தரி 2 போன்ற சீரியல்களிலும் நடித்துள்ளார்.
அந்தவகையில், ஜனநாயகன் படத்தில் நடிகர் விஜயின் மகளாக நடித்த லிதன்யாவின் வீட்டுச் சுற்றுப்பயணத்தை இக்காணொளியில் காணலாம்.