ஜனநாயகன் படத்தில் நீக்கப்பட்ட காட்சிகள் மீண்டும் சேர்க்க முடிவு?- இயக்குநர் ஹெச். வினோத்
இயக்குநர் ஹெச். வினோத் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள ஜனநாயகன் திரைப்படம் கடந்த 23ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது.
பூஜா ஹெக்டே, மமிதா பைஜூ, பாபி தியோல் உள்ளிட்டோர் நடித்துள்ள இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார்.
விஜயின் கடைசி திரைப்படம் ஜனநாயகன் கலவையான விமர்சனங்களை பெற்று, வசூலிலும் எதிர்பார்த்த அளவுக்கு சாதிக்கவில்லை என கூறப்படுகிறது.

லியோ முதல் நாளில் ரூ.147 கோடியும், தி கோட் ரூ.120 கோடியும் வசூலித்த நிலையில், ஜனநாயகன் முதல் நாளில் உலகம் முழுவதும் ரூ.70 கோடிக்கும் மேல் வசூலித்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
படம் 3 நாட்களில் ரூ.160 கோடியும், 5 நாட்களில் உலகளவில் ரூ.200 கோடியும் வசூலித்தாலும், வசூல் வேகம் குறைந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஜனநாயகன் படத்தில் நீக்கப்பட்ட 6 காட்சிகளை மீண்டும் சேர்க்கும் ஆலோசனையில் படக்குழு இருப்பதாக இயக்குநர் ஹெச். வினோத் தெரிவித்துள்ளார்.
நீக்கப்பட்ட காட்சிகளில் 2 நகைச்சுவை, 2 சண்டை மற்றும் 2 உணர்ச்சிப்பூர்வமான காட்சிகள் இடம்பெற்றுள்ளன.
தயாரிப்பாளர் ஒப்புதல் அளித்தால் அந்த காட்சிகள் படத்தில் சேர்க்கப்படும் என்று ஹெச். வினோத் கூறியுள்ளார்.