ரோட்டு கடைகளில் இந்த பழத்தை பார்த்தால் மறக்காம வாங்கி சாப்பிடுங்க! நன்மைகள் ஏராளம்
சீசனில் மட்டுமே கிடைக்கும் கண்ணை கவரும் நிறத்தில் காணப்படும் நாவல் பழத்தை சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள் குறித்து தெரிந்து கொள்வோம்.
பழம் மட்டுமின்றி இதன் விதை, மரப்பட்டை, இலை என அனைத்துமே மருத்துவ குணங்கள் கொண்டுள்ளது.
நாவல் பழத்தில் வைட்டமின் சி, வைட்டமின் பி, மெக்னீசியம், கால்சியம், பாஸ்பரஸ், இரும்புச்சத்து போன்ற சத்துக்கள் அடங்கியுள்ளன.
யுனானி மருத்துவ துறையில் இதன் விதைகளை சர்க்கரை நோய்க்கு மருந்தாக பயன்படுத்தி வருகின்றனர்.
இதன் விதையை பொடி செய்து நீரில் கலந்து குடித்தால் பல நன்மைகளை பெறலாம், தயிருடன் கலந்து சாப்பிட்டால் சிறுநீரக கற்கள் கரைந்து விடும்.
நாவல் பழத்தின் இலையை பொடி செய்து, அதனைக் கொண்டு பற்களை துலக்கி வந்தால் பல் தொடர்பான பிரச்சனைகளுக்கு தீர்வு கிடைக்கும்.
நாவல் பழத்தினை ஜூஸ் போட்டு, அதில் சிறிது கல் உப்பு சேர்த்து கலந்து குடித்து வந்தால் வயிற்றுப்போக்கு குணமாகும்.
இதிலுள்ள கரையும் நார்ச்சத்துக்கள் மலச்சிக்கல் பிரச்சனை வராமல் தடுக்கிறது, குறிப்பாக இதில் இனிப்பின் அளவும் குறைவு என்பதால் சர்க்கரை நோயாளிகள் பயமின்றி சாப்பிடலாம்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள். JOIN NOW |