உங்களைக் கண்மூடித்தனமாகப் பின்பற்றும் இளைஞருக்குக் கற்றுக்கொடுங்கள் - இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன்
இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன் வாரிசு இசை வெளியீட்டு விழா பற்றி பகிர்ந்த பதிவொன்று தற்போது வைரலாகி வருகின்றது.
இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன்
ஜேம்ஸ் வசந்தன் ஒரு இசையமைப்பாளராக சாதித்தது மட்டுமின்றி, தொலைக்காட்சி தொகுப்பாளராகவும், இயக்குநராகவும் இருந்துள்ளார்.
தற்போது இவர் தமிழ் திரையுலகில் இசையமைப்பாளராக பல ஹிட் பாடல்களை ரசிகர்களுக்கு கொடுத்து இருக்கிறார்.
மேலும் தனது முதல் திரைப்படத்திலே ஜேம்ஸ் வசந்தன் பெரியளவில் பெயரை பெற்றார்.
இந்தநிலையில் இவர் வாரிசு இசை வெளியீட்டு விழா பற்றி தனது கருத்தை வெளியிட்டுள்ளார்.
வாரிசு ஆடியோ லாஞ்ச்
விஜய் நடிப்பில் வெளியாகவுள்ள வாரிசு படத்தின் இசைவெளியீட்டு விழா, கடந்த வாரம் சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் பிரமாண்டமாக நடைபெற்றது.
இது தொடர்பான வீடியோ இணையம் முழுவதும் வைரலானது.
நடிகர் விஜய், நடிகை ராஷ்மிகா மந்தனா உள்ளிட்ட படக்குழுவினரும் திரையுலகப் பிரபலங்களும் கலந்துகொண்டனர்.
இவை சமூக வலைதளங்களில் பேசுபொருளாகவும் மாறி இருந்தது.
பேஸ்புக் பதிவு
இந்நிலையில் இந்த இசை வெளியீட்டு விழா குறித்து இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன் பேஸ்புக்கில் தனது கருத்தைப் பதிவிட்டுள்ளார்.
அதில் “நடைமுறை வரைமுறைகளை உங்களைக் கண்மூடித்தனமாகப் பின்பற்றும் இளைஞருக்குக் கற்றுக்கொடுங்கள்” என்று கூறியுள்ளார். மேலும் பல விஷயங்களை இவர் பகிர்ந்துள்ளார்.
இந்த பதிவு தற்போது இணையத்தில் படு வேகமாக வைரலாகி வருகின்றது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.