மெய்சிலிர்க்க வைக்கும் டிடிஎஃப் வாசனின் குறும்படம்! இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன் புகழாரம்
பிக் பாஸ் நிகழ்ச்சியில் வைர டாஸ்கில் வெற்றிபெற்ற டிடிஎஃப் வாசனின் திறமை குறித்து இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன் வெளியிட்டுள்ள காணொளி தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.
பிக் பாஸ்
பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் இந்த வாரம் அன்சர் வீட்டின் தலைவராக இருந்து வரும் நிலையில், எதிர்கட்சி தலைவராக முத்தழகி இருந்து வருகின்றார்.

பிக்பாஸ் எவிக்ஷன் ப்ரீ டிக்கெட்டை காமன் மேன் நிகழ்ச்சியிலிருந்து வந்த போட்டியாளர்களான ஷமா, ஜெய்சன் வென்றுள்ளனர்.
நேற்றைய தினம் டிடிஎஃப் வாசன் வைரத்தை திருடி வைப்பதற்கு சரியான இடத்தினை கண்டுபிடித்து வைரத்தை திருடியும் வைத்துள்ளார்.

வீட்டிற்குள் இருக்கும் மற்ற போட்டியாளர்கள் அனைவரும் எவ்வளவு தேடியும் வைரத்தினைக் கண்டுபிடிக்கமுடியவில்லை.இந்நிலையில் மக்கள் எதிர்பார்த்தது போன்று குறும்படம்போட்டு விஜய் சேதுபதி காட்டியுள்ளார்.

ஜேம்ஸ் வசந்தன் புகழாரம்
மேலும் வைரத்தை திருடி இந்த டாஸ்கில் வெற்றிபெற்ற வாசனினுக்கு எவிக்ஷன் ப்ரீ டிக்கெட்டும் கிடைத்துள்ளது.
இந்நிலையில், டிடிஎஃப் வாசனின் திறமை பற்றி புகழ்ந்து பேசி இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன் தற்போது வெளியிட்டுள்ள காணொளி தற்போது இணையத்தில் ரசிகர்களின் கவனத்தை வெகுவாக ஈர்த்து வருகின்றது.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |