அனிருத் திருமண ஏற்பாடுகள் தீவிரம்: முக்கியப் பிரமுகர்களுக்கு அழைப்பிதழ்!
இசையமைப்பாளர் அனிருத் மற்றும் சன் குழுமத் தலைவர் கலாநிதி மாறனின் மகள் காவ்யா மாறன் ஆகியோரின் திருமணம் குறித்த செய்திகள் தற்போது இணையத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.
கடந்த சில மாதங்களாகவே இருவரின் திருமணம் தொடர்பாகப் பல்வேறு தகவல்கள் வெளியாகி வந்த நிலையில், தற்போது திருமண ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருவதாகக் கூறப்படுகிறது.

அனிருத் திருமணம்
இதற்கிடையில், தமிழக முதலமைச்சர் விஜய், பிரதமர் நரேந்திர மோடி மற்றும் தமிழக ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் ஆகியோரை நேரில் சந்தித்த கலாநிதி மாறன், திருமண அழைப்பிதழை வழங்கியுள்ளார்.இது தொடர்பான புகைப்படங்களும் தற்போது இணையத்தில் வெளியாகியுள்ளன.

மேலும், திருமண வரவேற்பு விழா சென்னையில் நவம்பர் 21ஆம் தேதி நடைபெறவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த விழாவுக்கான அழைப்பிதழை இதற்கான அழைப்பிதழை, குடும்பத் தலைவரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் விடுத்துள்ளார்.
அழைப்பு முதலமைச்சர் சி. ஜோசப் விஜயை சந்தித்து, காவியா கலாநிதி மாறன் - அனிருத் ரவிச்சந்தர் திருமண வரவேற்பு விழா அழைப்பிதழை வழங்கினார் சன் டிவி குழுமத் தலைவர் கலாநிதி மாறன். காவேரி கலாநிதி, அனிருத் ரவிச்சந்தர் உடன் இருந்தனர். #SunNews | #KaviyaMaran | #Anirudh | #Vijay
— Sun News (@sunnewstamil) October 17, 2026