MONEY HEIST வெப் சீரிஸ் பாருங்க... ஊழியர்களுக்கு விடுமுறை அளித்த பிரபல நிறுவனம்!
உலக அளவில் புகழ் பெற்ற வெப் சீரீஸானது Money Heist. இந்த சீரியஸிற்கு மொழி மற்றும் நாட்டை தாண்டி கோடிக்கணக்கான ரசிகர்கள் உள்ளனர். தற்போது இதன் 5-ம் பாகம் வெளியாக உள்ளது.
இது Money Heist ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், செம்படம்பர் 3ம் தேதி எப்போது வரும் எனக் காத்திருக்கிறோம் எனப் பலரும் சமூகவலைத்தளங்களில் பதிவிட்டு வருகிறார்கள்.
இதனிடையே, ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரை மையமாக வைத்து இயங்கி வரும் வெர்வ் லாஜிக் என்ற நிறுவனம் "நெட்பிளிக்ஸ் அண்ட் சில் ஹாலிடே" என்று பெயரிட்டு அன்று ஊழியர்கள் மொத்தமாக விடுமுறையை அறிவித்துள்ளது.
இந்த அறிவிப்பைத் தனது ட்விட்டர் பக்கத்தில் அந்நிறுவனம் வெளியிட்டுள்ளது. இதனைக் கண்ட இளைஞர்கள் தங்கள் டீம் லீடர் கண்ணில் படும் வரை ஷேர் செய்யுங்கள் எனச் சமூகவலைத்தளங்களில் பதிவிட்டு வருகிறார்கள்.
Have Been Going Over the Love We have Received.!
— Verve Logic (@VerveLogic) August 30, 2021
Yes it is real and we are absolutely happy to announce an off on 3rd September naming it to be "Netflix & Chill Holiday" on the release of final season of #MoneyHeist @NetflixIndia- Please don't end this one! "Kehdo Ye Juth Hai"❤️ pic.twitter.com/M9RmFbZPOi