ராட்சத முதலையை அசால்ட்டாக தூக்கிய சிறுத்தை! இறுதியில் என்ன நடந்தது?
பிரம்மாண்டமாக வளர்ந்த சிறுத்தையொன்று ராட்சத முதலையை அசால்ட்டாக வேட்டையாடி தூக்கிச்செல்லும் மெய்சிலிர்க்கும் காட்சியடங்கிய காணொளியொன்று இணையத்தில் வெளியாகி அசுர வேகத்தில் பகிரப்பட்டு வருகின்றது.
பொதுவாகவே வேட்டை விடயத்தில் சிறுத்தை மற்றும் முதலில் ஆகிய இரண்டுமே ஒன்றையொன்று சளைத்தது கிடையாது. இவை தங்களின் எல்லைகளில் மிகச்சிறந்த வேட்டைக்காரர்கள். ஆனால், அவற்றின் வேட்டையாடும் உத்திகள் முற்றிலும் வேறுபட்டவை.

இந்நிலையில், வேகமும் வலிமையும் கொண்ட சிறுத்தை, தனது அதீத வேட்டையாடும் திறமையை வெளிப்படுத்தும் வகையில், பெரும் அளவிலான முதலையை வெற்றிகரமாக பிடித்து இழுத்து செல்லும் காட்சியடங்கிய காணொளி சமூக வலைதளங்களில் வெளியான சில மணி நேரங்களிலேயே அசுர வேகத்தில் பகிரப்பட்டு வருகிறது.
இயற்கையின் கொடூரத்தையும் அதே நேரத்தில் அதிசயத்தையும் வெளிப்படும் இந்த அரிய தருணம், பார்வையாளர்களை வியப்பில் ஆழ்த்தியுள்ளது. குறித்த காணொளியை பாரத்த பலரும் இதை “இயற்கையின் உண்மையான போராட்டம்” என தங்களின் கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர்.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |