இலங்கையில் தமிழரின் பகுதியில் பல்லாயிரக்கணக்கான ஆண்டுகள் பழமையான வரலாற்றுத் தடயம்!
இலங்கையில் வன்னித் தலைநிலத்தையும் யாழ்ப்பாணக் குடாநாட்டையும் பிரிக்கும் யாழ்ப்பாண நீரேரியின் தென்கரையில் பூநகரி என்று அழைக்கப்படும் ஊரில் அமைந்திருந்த ஒரு சிறிய கோட்டை பூநகரிக் கோட்டை ஆகும்.
கரையோரத்தில் இருந்து ஒரு மைலுக்கு மேல் தொலைவில் உட்புறமாக அமைந்திருந்த இக் கோட்டையில் முக்கியத்துவம் வாய்ந்த பணிகள் எதுவும் நடந்திருக்க வாய்ப்புக்கள் இல்லை என்பது இலங்கையில் உள்ள ஒல்லாந்தர் கோட்டைகளைப் பற்றி ஆராய்ந்து நூல் எழுதிய நெல்சன் என்பவரின் கருத்தாகும்.
அந்த வகையில்,யாழ்.கொழும்புத்துறைக்கும்,பூநகரிக்கும் இடையிலான 3000 ம் ஆண்டுகள் பழமையான தடயம் தொடர்பிலான முக்கிய தகவல்களை எம்முடன் முருகவேல் பூநகிரி பொன்னம்பலம் (Murugaverl Poonagari Ponnampalam) பகிர்ந்துக்கொண்டுள்ளார் .