யாழில் திருடப்பட்ட சிலை! 400 வருட பழைமையான சோழர்கால ஆலயத்தின் தற்போதைய நிலை
இலங்கையில் யாழ்ப்பாணம் வட்டுக்கோட்டை துணைவி கிராமத்தில் உள்ள திருவிளக்கு பிள்ளையார் ஆலயம் கிட்டத்தட்ட 400 ஆண்டுகள் பழைமையானதாக ஊரில் வசிப்பவர்களினால் நம்பப்படுகின்ற போதிலும் இது சோழர் காலத்து கோவில் என குறிப்பிடப்படுகின்றது.
மிகத் தொன்மையான எமது முன்னோர்களின் வழிப்பாட்டுத் தலமான இவ்வாலயம் பல ஆண்டு காலம் கவனிப்பார் இன்றிக் காணப்பட்ட நிலையில் தற்சமயம், மீள்உருவாக்கம் செய்யப்பட்டு வருகின்றது.
உள்ளூர்வாசிகளின் கருத்துப்படி இந்த கோவிலில் இருந்து திருடப்பட்ட பிள்ளையார் சிலை தற்போது கைதடி பிள்ளையார் ஆலயத்தில் வைக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்படுகின்றது.
சிலை திருடப்பட்டு குறிப்பிட்ட காலம் வரையில் வெள்ளி , செவ்வாய் கிழைமைகளில் கோவில் வளாகத்தில் மணி சத்தம் மற்றும் சலங்கை சத்தம் கேட்டதாகவும் குறிப்பிடப்படுகின்றது. இந்த ஆலயம் குறித்த முழுமையான விபரங்களை இந்த காணொளியில் காணலாம்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |