ஜடேஜாவுக்கு ஆங்கிலமே தெரியாது- சஞ்சய் மஞ்சரேக்கரின் உண்மை முகத்தை உடைத்த ரசிகர்!
இந்திய கிரிக்கெட் அணியின் ஆல் ரவுண்டர் ரவீந்திர ஜடேஜாவுக்கு ஆங்கிலம் தெரியாது என ட்விட்டர் செய்த வர்ணனையாளர் சஞ்சய் மஞ்சரேக்கரின் பதிவு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது.
இந்திய கிரிக்கெட் ஆல் ரவுண்டர் ஜடேஜாவை பற்றி அடிக்கடி அவதூறாக பேசியவர் தான் வர்ணனையாளராக உள்ள மஞ்சரேக்கர். இவரின் ஏற்கனவே சர்ச்சையான பதிலுக்கு ஜடேஜா பல முறை பதிலடி கொடுத்துள்ளார்.
ஆனாலும் இவர் ஏதாவது ஒரு சர்ச்சையை கிளப்பிக்கொண்டு தான் இருக்கிறார். அந்த வகையில், ட்விட்டரில் சூர்ய நாராயணன் என்பவர் மஞ்சரேக்கருடன் செய்த சாட் பதிவை வெளியிட்டு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளார்.
மேலும், சஞ்சய் மஞ்சரேக்கர் அந்த சாட்டில் அந்த நபரிடம் ஜடேஜா தொடர்பாக நிறைய வாதாடிருக்கிறார், அதற்கு பதிலளித்துள்ள அவர் "உங்களைப் போல நானும் வீரர்களை வழிபாடு செய்ய வேண்டும் என நீங்கள் நினைக்கிறீர்கள். உங்களைப் பார்த்து நான் வருத்தப்படுகிறேன்.
நான் ரசிகன் இல்லை, நான் ஒரு கிரிக்கெட் விமர்சகர், ஆய்வு செய்பவன். பின்பு முக்கியமான விஷயம் என்னவென்றால் ஜடேஜாவுக்கு ஆங்கிலம் தெரியாது. அதனால் நான் சொன்னது அவருக்கு புரியவில்லை. எனக்கு அவர் அளித்த பதில் கூட வேறுயாராவது ஆங்கிலத்தில் சொல்லிக்கொடுத்து இருப்பார்கள்" என சர்ச்சையான பதிலை வெளியிட்டுள்ளார்.
உடனே இதனை ஸ்க்ரீன் ஷாட் எடுத்த அந்த நபர் இதனை பிசிசிஐ மற்றும் சவுரவ் கங்குலியை டேக் செய்துள்ளார்.
மேலும் அந்த ரசிகர் வெளியிட்ட பதிவில் "இந்த தனிப்பட்ட முறையான உரையாடலை நான் பொது வெளிக்கு கொண்டு வரக்கூடாது என்றே நினைத்தேன். ஆனால் இந்த மனிதரின் மறுப்பக்கம் தெரிய வேண்டும் என்பதற்காகவே இதை பகிர்கிறேன்.
ஜடேஜாவை நினைத்தால் எனக்கு பெருமையாக இருக்கிறது. சஞ்சய் நினைத்தது தவறு என நீங்கள் நிரூபித்துவிட்டீர்கள்.
பிசிசிஐ எதிர்காலத்ததில் கூட இதுபோன்ற நபர்களை வர்ணனையாளர் குழுவில் சேர்க்க கூடாது என காட்டமாக தெரிவித்துள்ளார். இந்த பதிவு ரசிகர்களிடையே வைரலாகி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.,
I didn’t want to share this personal chat in public, even though it’s full to shit. But couldn’t help, coz ppl need to know this side of this man. @imjadeja would be proud of what he did to prove you wrong. @BCCI is this the kind of man you would want in your com panel in future? pic.twitter.com/AUjX301Foz
— soorya narayanan (@soorya_214) June 7, 2021