பலாப்பழ கொட்டையில் உருண்டை செய்து சாப்பிட்டால் என்ன பலன் கிடைக்கும்? தெரிஞ்சிக்கோங்க!
பொதுவாக வீடுகளில் பலாப்பழம் சாப்பிட்டால் அதன் கழிவுகளை வெளியில் வீசமாட்டார்கள்.
கழிவுகளை உரமாக காய்கறிகள் வீட்டு தோட்டங்களில் இருந்தால் அங்கு போடுவார்கள்.
பழங்களிலிருந்து வெளியேறும் கொட்டைகளை கறி வைப்பார்கள் அல்லது தேங்காய் பூ சேர்த்து உருண்டை செய்து சாப்பிடுவார்கள்.
இவ்வாறு சாப்பிடுவதால் உடலுக்கு ஏகப்பட்ட ஆரோக்கியம் கிடைக்கின்றது என வீட்டிலுள்ள பெரியவர்கள் கூறுவார்கள்.
அப்படி என்ன என்ன பலன்கள் இந்த உருண்டைகளால் கிடைக்கின்றது என தொடர்ந்து பார்க்கலாம்.
பலாப்பழ உருண்டை சாப்பிட்டால் என்ன நடக்கும்?
1. கண் பார்வை குறைவாக இருப்பவர்கள் பலாக் கொட்டைகளால் உருண்டை செய்து சாப்பிட்டால் காலப்போக்கில் கண் பார்வை பிரச்சினை சரியாகும். ஏனெனின் பலாவில் வைட்டமின் ஏ சத்து நிறைந்துள்ளது,
2. பலாப்பழத்தில் அதிகமாக இரும்புச்சத்துக்கள் நிறைந்துள்ளன. ஆகையால் குழந்தை பிறந்த தாய்மார்கள் தங்களின் ஆரோக்கியத்திற்காக இந்த உருண்டையை அடிக்கடி சாப்பிடுவார்கள்.
3. மலட்டுத்தன்மையாக இருபவர்கள் பலாக்கொட்டை உருண்டை சாப்பிடலாம். ஏனெனின் இதிலிருக்கும் சில பொருட்கள் தங்களின் பாலூணர்வை அதிகப்படுத்துகின்றது.
4. வயிற்றில் ஏற்படும் சில மாசுக்கள் தேக்கம் காரணமாக வாயு பிரச்சினை இருக்கும். இவ்வாறு பிரச்சினை இருந்தால் பலாக் கொட்டையில் உருண்டை செய்து சாப்பிடலாம்.
5. பலாப்பழ விதையில் உள்ள ஆன்டி ஆக்சிடன்டுகள் முதுமையை தள்ளிப்போட உதவுகிறது. என்றும் இளமையாக இருக்க உதவிச் செய்கின்றது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |