நாக சைதன்யா தோற்றத்துக்கு 10 க்கு 10 மார்க் கொடுத்த சமந்தா! தீயாய் பரவும் தகவல்
நடிகை சமந்தா தனது முன்னாள் கணவன் நாக சைதன்யாவின் தோற்றம் ஹிருத்திக் ரோஷன் தோற்றத்தை விட சிறப்பானது என மார்க்கொடுத்த காணொளியொன்று மீண்டும் இணையத்தில் வைரலாகி வருகின்றது.
நடிகை சமந்தா
தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகையாக இருப்பவர் தான் நடிகை சமந்தா. இவர் நடிப்பில் சமீபத்தில் சிட்டாடல் எனும் வெப் தொடர் வெளிவந்து நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.
நடிகை சமந்தா மற்றும் டோலிவுட் நடிகர் நாக சைதன்யா இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டார்கள் என்பது அனைரும் அறிந்ததே. ஆனால் கருத்து வேறுபாடு காரணமாக நான்கே ஆண்டுகளில் விவாகரத்து பெற்றார்கள்.
அண்மையில் சமந்தாவின் முன்னாள் கணவர் நாக சைதன்யாவிற்கும் நடிகை சோபிதா துலிபாலாவிற்கும் திருமணம் நடைபெற்றது.
ஆனால் சமந்தா எதையும் பொருட்படுத்தாமல் தன்னை தானே மீட்டுக்கொண்டு கடினமான சூழ்நிலைகளையும் நேர்த்தியாகவும் அமைதியாகவும் கடந்து வருகின்றார்.
இந்நிலையில் நடிகை சமந்தாவின் பழைய நேர்காணல் ஒன்று இணையத்தில் மீண்டும் வெளியாகி வைரலாகி வருகின்றது.
அதில், ஹிருத்திக் ரோஷன் உட்பட பல பாலிவுட் நடிகர்களைப் பற்றிய அவரது வெளிப்படையான கருத்துக்களுக்காக பரவலான கவனத்தை ஈர்த்துள்ளது.
சாக்ஷி தொலைக்காட்டியில் முதலில் ஒளிபரப்பான இந்த காணொளி சமீபத்தில் ஒரு ரெடிட் பயனரால் பகிரப்பட்டது. குறித்த நேர்காணலின் போது, சமந்தாவிடம் பல இந்திய நடிகர்களின் தோற்றத்தின் அடிப்படையில் மதிப்பீடு செய்யுமாறு கேட்கப்பட்டது.
அவர் தெலுங்கு சூப்பர் ஸ்டார் மகேஷ் பாபுவுக்கு சரியான மதிப்பெண் அளித்தார், "மதிப்பிடவா? மகேஷ் பாபு? 10 இல் 10 அதை நான் யோசிக்கவே வேண்டியதில்லை. என குறிப்பிட்டுள்ளார்.
நேர்காணல் செய்பவர் ஹிருத்திக் ரோஷனைப் பற்றிக் குறிப்பிட்டபோது, எனக்கு தெரியும், எல்லோரும் என்னைக் கொன்றுவிடுவார்கள், ஆனால் எனக்கு ஹிருத்திக்கின் தோற்றம் அதிகம் பிடிக்காது. சரி, 10 இல் ஏழு கொடுக்கலாம் என குறிப்பிட்டுள்ளார்.
அந்த வரிசையில் நாக சைத்தன்யா குறித்த கேட்டபோது கொஞ்சடும் யோசிக்காமல் 10 க்கு 10 என குறிப்பிட்டுள்ளார். குறித்த தகவல் தற்போது மீண்டும் இணையத்தை ஆக்கிரமித்து வருகின்றது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |