இயற்கை பட இந்த நடிகையை ஞாபகம் இருக்கின்றதா? அப்பா வயது நபரை திருமணம் செய்தது ஏன்?
சினிமாவில் சில படங்களில் நடித்து மக்கள் மனதில் இடம்பிடித்த நடிகை தான் குட்டி ராதிகா. இவர் கடந்து வந்த பாதையை தற்போது தெரிந்து கொள்வோம்.
குட்டி ராதிகா
கடந்த 2003ம் ஆண்டு வெளியான இயற்கை என்ற படத்தில் நடிகர் ஷாம் ஜோடியாக நடித்தவர் தான் குட்டி ராதிகா. அதிலும் இப்படத்தில் காதல் வந்தால் சொல்லி அனுப்பு... உயிரோடிருந்தால் வருகிறேன் என்ற பாடல் இன்றும் இளைஞர்களின் பிடித்ததாகும். அழகான அழுத்தமான காதலை சொன்னது இப்படம்.
கர்நாடகா மாநிலத்தில் பிறந்த குட்டி ராதிகா, ஒன்பதாவது படித்துக் கொண்டு இருக்கும் போதே, நீல மேக சியாமா என்ற படத்தில் நடித்தார்.
இப்படத்தை தொடர்ந்து பல படங்களில் நடித்தவருக்கு அடையாளமாக அமைந்தது இயற்கை படம் தான்.
கடந்த 2000ம் ஆண்டு ரத்தன் குமார் என்பவரை திருமணம் செய்து கொண்ட இவர், கருத்துவேறுபாடு காரணமாக சில ஆண்டுகளில் பிரிந்து வாழ்ந்ததாக கூறப்பட்ட இவரின் கணவர், திருமணமான 2 ஆண்டுகளில் அதாவது 2002ம் ஆண்டு திடீரென உயிரிழந்ததால், குட்டி ராதிகாவிடம் பொலிசார் விசாரணையும் நடத்தினர். அடுத்தடுத்து சர்ச்சையில் சிக்கிய இவர், பின்பு வெளியிடங்களில் தலைகாட்டாமல் இருந்தார்.
அப்பா வயது நடிகருடன் திருமணம்
இவ்வாறு வெளியில் தலைகாட்டாமல் இருந்த இவர், திடீரென ஒரு நாள் குழந்தையும் கையுமாக வந்து அதிர்ச்சி கொடுத்தார். அவர் சர்ச்சையில் சிக்கியிருந்த காலத்தில் கன்னட முதலமைச்சராக இருந்த குமாரசாமிக்கும் இவருக்கும் திருமணம் ஆகியுள்ளதாம்.
கடந்த 2006ம் ஆண்டு திருமணம் ஆகியுள்ளதாகவும் தங்களுக்கு ஷமிகா என்ற பெண் குழந்தை இருப்பதாகவும் திருமண விஷயத்தை வெளியில் கூறியுள்ளார். தற்போது சற்று வாழ்க்கையில் மீண்டு வந்த இவர், சில படங்களில் நடித்து வருகின்றார்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள். JOIN NOW |