பிடிப்பட்ட ரித்தீஷ்.. குத்தாட்டம் போட்ட செல்வி மகன்- காதல் தோல்விக்கு கம்பெனி கொடுத்த அம்மா
இனியாவின் கணவர் பொலிஸில் பிடிப்பட்ட நேரத்தில், செல்வியும் மகனும் சேர்ந்து பாக்கியா ஹோட்டலில் குத்தாட்டம் போடும் காணொளி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.
பாக்கியலட்சுமி
பிரபல தொலைக்காட்சியில், பரபரப்பாக ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று தான் பாக்கியலட்சுமி.
இந்த சீரியலில், தற்போது இனியாவை நித்தேஷுக்கு சுதாகர் வைத்து, இரண்டு ஹோட்டல்களையும் தன்வசப்படுத்தியிருக்கிறார் என்ற உண்மை அனைவருக்கும் தெரியவந்துள்ளது.
கட்டுக்கதைகளை அடுக்கிச் செல்லும், சுதாகர் குடும்பத்தினருக்கு இனியா சரியான பாடம் கொடுப்பார் என எதிர்ப்பார்த்த வேளையில், இனியாவிற்கு ரித்திஷ் பற்றிய உண்மைகள் தெரியவந்துள்ளது.
இதனை கோபியிடம் பிறந்த நாள் அன்று கூறி, இனியா அழுகிறார். ஆகாஷை திருமணம் செய்து விடுவார் என்ற பயத்தில் கோபியும் ஈஸ்வரியும் பார்த்த வேலையால் இனியாவின் வாழ்க்கை வீணாக்கி விட்டது.
ஆகாஷ் செய்த வேலை
இந்த நிலையில், ரித்திஷ் போதையில் இருந்த பொழுது அவரையும் நண்பர்களையும் பொலிஸார் கைது செய்துள்ளனர். இதனை பார்த்த பாக்கியா மகளின் வாழ்க்கையை நினைத்து அதிர்ச்சியாகிறார்.
இப்படியொரு பக்கம் சென்றுக் கொண்டிருக்கையில், ஆகாஷ் மற்றும் அவரின் அம்மாவான செல்வியும் பாக்கியா ஹோட்டலில் குத்தாட்டம் போடும் காணொளியொன்று சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ளது.
காதல் தோல்வியால் வாடும் ஆகாஷிற்காக இனியா வருவாரா? என சின்னத்திரை ரசிகர்கள் எதிர்பார்த்து கொண்டிருக்கும் பொழுது வெளியான காணொளி, இணையவாசிகளை அதிர்ச்சியாக்கியுள்ளது.
“இது தான் ஆள் இல்லாத நேரம் பார்க்கும் வேலையா?” என கலாய்க்கும் வகையில் கருத்துக்களை பதிவிட்டு வருகிறார்கள்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |