பயங்கர ஷாக்கில் ராஜூ! கமலின் அதிரடி அறிவிப்பு...கண்ணீருடன் வெளியேறிய தாமரை
இந்த வாரம் பிக் பாஸ் வீட்டில் இருந்து தாமரைச்செல்வி வெளியேற்றப்பட்டுள்ளார்.
ஏற்கனவே தாமரை வெளியேற்றப்பட்ட தகவல்கள் கசிந்த நிலையில், அந்த காட்சியை எபிசோடில் பார்த்த ரசிகர்கள் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர்.
தாமரை எவிக்ட் என கமல் அறிவித்த நிலையில், ராஜுவை கட்டிப்பிடித்து கன்னத்தில் முத்தம் கொடுத்த தாமரை மூத்த மகன் என சொன்னது ராஜுவை நெகிழ வைத்து விட்டது.
தாமரை எவிக்ட் என்கிற அறிவிப்பு ராஜுவுக்கு பயங்கர ஷாக்கிங்காக அமைந்தது அவரது முகம் தெளிவாக காட்டிக் கொடுத்து விட்டது.
இதேவேளை, வெளியே உங்களுக்கான எதிர்காலம் இருப்பதாக கூறி அவரை வாழ்த்தி கமல் அனுப்பி வைத்தார்.

தெருக்கூத்து நாடகங்களில் நடித்து வந்த தாமரை பிக் பாஸ் தமிழ் சீசன் 5ல் போட்டியாளராக கலந்து கொண்ட போது யாரு இந்த ஆயம்மா பிக் பாஸ் வீட்டுக்குள் வந்திருக்காங்க முதல் வாரமே இவங்க தான் வெளியேற போறாங்கன்னு பலர் கலாய்த்தார்கள்.
ஆனால், தனது விடா முயற்சியால் கடைசி வாரத்திற்கு முந்தைய வாரம் வரை பிக் பாஸ் வீட்டில் இருந்து பல கோடி மக்களின் மனங்களை பிடித்து விட்டார்.

பிக் பாஸ் தமிழ் நிகழ்ச்சியில் இத்தனை சீசன்களில் வந்த போட்டியாளர்களில் மறக்கவே முடியாத ஒரு முகமாக தாமரைச் செல்வி மாறிவிட்டார்.
ஒன்றுமே தெரியாத வெள்ளந்தியாக வந்து ஒவ்வொன்றையும் நொடிப் பொழுதில் கற்றுக் கொண்டு இந்த கேமை சிறப்பாக ஆடிய தாமரை போட்டியில் இருந்து சென்றாலும் மக்கள் மனதில் நிலைத்திருப்பார் என்பது உண்மை.
