கட்டிலுக்கு அடியில் மறந்தும் கூட இந்த பொருளை வெச்சுடாதீங்க..! குழந்தைகளுக்கு ஆபத்து
பொதுவாக வீடுகளில் படுக்கையறையில் இருக்கும் கட்டிலுக்கு அடியில் வீட்டில் பாவனைக்கு எடுக்காத பல பொருட்களை சேமித்து வைப்போம்.
உதாரணமாக பழைய பொருட்கள், சட்டி பானைகள்,துடைப்பம், உடைந்த கண்ணாடிகள், மின் பாவனை உபகரணங்கள் என்பவற்றை கூறலாம்.
வாஸ்து படி இது போன்று நடந்து கொள்வதால் அது வீட்டிற்கு தத்ரீயத்தை உண்டுபண்ணும் என்கிறார்கள். இது போல் ஒரு வீட்டில் படுக்கையறையும் பூஜை அறையும் முக்கியமானதாக பார்க்கப்படுகிறது.
அந்த வகையில் வாஸ்துப்படி ஒருவர் படுக்கையில் உள்ள கட்டிலுக்கு அடியில் வைக்கக்கூடாத பொருட்கள் குறித்து தெரிந்து கொள்வோம்.
கட்டிலுக்கு அடியில் இந்த பொருட்கள் இருந்தால் ஆபத்து
1. கண்ணாடி
பொதுவாக வீடுகளில் முகம் பார்க்கும் கண்ணாடி அல்லது யன்னல் கதவிலுள்ள கண்ணாடிகள் உடைந்து விட்டால் அதனை கட்டிலுக்கு அடியில் யாருக்கும் காயம் படக்கூடாது என எடுத்து வைப்போம். அது முற்றிலும் தவறான பழக்கம் இதனால் திருமணமான தம்பதிகளிடையே சண்டையை ஏற்பட்டு உறவில் விரிசலை ஏற்படும்.
2. இரும்பு
வீடுகளில் வேலைக்கு கொண்டு செல்லும் ஆயுதங்கள், மற்றும் வீட்டில் பயன்படுத்தும் ஆயுதங்கள் என அனைத்து கட்டிலுக்கு அடியில் தான் இருக்கும். இதனால் குடும்பத்தில் அடிக்கடி சண்டைகள் ஏற்படும். இதனால் தான் சில வீடுகளில் இதுக்காகவே ஒரு அறை கட்டியிருப்பார்கள்.
3. துடைப்பம்
வீட்டை பெறுக்கி விட்டு அந்த துடைப்பத்தை மீண்டும் அறையின் கட்டிலுக்கு அடியில் அல்லது மேசைக்கு அடியில் வைப்போம். இது வீட்டிற்கு வரக்கூடிய லட்சுமி வரவை தடுக்கிறது. இதனால் அடிக்கடி வீட்டில் பண நெருக்கடி ஏற்படும்.
4. காலணி
பொதுவாக வீடுகளில் நாம் பயன்படுத்தும் காலணிகளை கட்டிலுக்கு அடியில் வைத்திருப்போம். இது சிலர் தெரிந்து செய்வார்கள் இன்னும் சிலர் அறியாமல் வைத்திருப்பார்கள். இந்த காலணி வீட்டிற்கு எதிர்மறையான சக்திகள் வருவதற்கு சார்பாக அமைகிறது. இதனால் வீட்டில் நிம்மதி இருக்காது.
5. மின்சார பொருட்கள்
சமைப்பதற்கு பயன்படுத்தும் மின்சார பொருட்கள் மற்றும் ஆடம்பர தேவைக்களுக்காக பயன்படுத்தும் மின்சார பொருட்கள் இவை அடிக்கடி கட்டிலுக்கு அடியில் வைக்கப்படும். இது வீட்டிற்கு அவ்வளவு நல்லது அல்ல.இது போன்ற பொருட்கள் இருக்க வேண்டிய இடத்தில் வைக்க வேண்டும்.
முக்கிய குறிப்பு
வீட்டில் தேவையற்ற பொருட்கள் அல்லது பழுதடைந்த பொருட்களை மீண்டும் வீட்டிற்குள் வைக்கக்கூடாது. இதுவும் வீட்டிற்கு அவ்வளவு நல்லது அல்ல.