சமையலறையில் நீண்ட காலம் பயன்படுத்தக்கூடாத பொருட்கள் - காரணம் என்ன?
வீட்டின் உயிர்நாடியாக இருப்பது சமையலறை தான். இந்த சமையலறை எப்போதும் சுத்தமாகவும் சுகாதாரத்தை பேணும் இடமாகவும் இருக்கும்.
ஒரு வீட்டின் சமையலறை வைத்து தான் அந்த வீட்டின் சுத்தத்தை நிரூபிக்க முடியும்.
வீட்டிற்கு வருபவர்கள் வீட்டின் சமையலறை நன்றாக இருந்தால் தான் தண்ணீர் கூட குடிப்பார்கள்.
இப்படி இருக்கையில் பார்ப்பதற்கு பளபள என்று இருக்கும் பொருட்களிலும் சுகாதாரத்தை பேணுவது அவசியம். அந்த வகையில் சமையலறையில் நீண்ட காலத்திற்கு வைத்து பயன்படுத்தகூடாத பொருகள் பற்றி பார்க்கலாம்.

சமையலறையில் நீண்ட காலம் பயன்படுத்த கூடாத பொருட்கள்
| டவல் | சமையலறையில் பல பயன்பாடுகளைக் கொண்ட ஒரு பொருள் டவல். இது சூடான பாத்திரங்களை தூக்கவும் கைகளை துடைக்கவும் பாத்திரங்களை துடைக்கவும் பயன்படும். இதை இரண்டு வாரத்திற்கு ஒன்று என்று பயன்படுத்த வேண்டும். சுத்தம் செய்து பயன்படுத்தினாலும், நீண்ட காலத்திற்கு ஒன்றையே பயன்படுத்தக் கூடாது. |
| கட்டிங் போர்டு | சமையலறையில் தவிர்க்க முடியாத ஒன்று கட்டிங் போர்டு. இது காய்கறிகளை வெட்டவும் சமைக்கும் அனைத்து பொருட்களை வெட்டவும் பயன்படும். ஆனால் இதில், கறைகள் மற்றும் கிருமிகள் உருவாக வாய்ப்புள்ளதால், இதை நீண்ட காலம் பயன்படுத்தக் கூடாது. |
| மசாலாப் பொருட்கள் | கறிக்கு முக்கியமான மசாலாப்பொருட்களை சரியான முறையில் சேமித்தால், இதை பல மாதங்கள் பயன்படுத்தலாம். ஆனால், காலாவதியான பிறகு இதுபோன்ற பொருட்களைப் பயன்படுத்தக் கூடாது. |
| பிளாஸ்டிக் பாத்திரங்கள் | பிளாஸ்டிக் பாத்திரங்களைப் பயன்படுத்துவதும் சுத்தம் செய்வதும் எளிது. ஆனால், அவை பழைமையானதும் அவற்றைப் பயன்படுத்தக் கூடாது. எனவே அடிக்கடி உபயோகிக்கும் பொருளாயின் அவற்றை பினாஸ்டிகில் வாங்குவதை தவிர்ப்பது நல்லது. |
| பாட்டில்கள் | தண்ணீர் குடிக்கும் பாட்டில்களில் கறைகளும் கிருமிகளும் அதிகமாக இருக்கலாம். எனவே, பழைமையான பாட்டில்களைப் பயன்படுத்த வேண்டாம். |
| ஸ்பான்ச் | சுத்தம் செய்யப் பயன்படுவதால், ஸ்பான்ச்சில் ஏராளமான கிருமிகள் உருவாகின்றன. இது குழந்தைகள் கூட அறிந்த விடயம். எனவே, பழையதை மாற்றி புதியதைப் பயன்படுத்த வேண்டும். |
| வாட்டர் ஃபில்டர் | வாட்டர் ஃபில்டரிலும் கிருமிகள் உருவாக வாய்ப்பு அதிகம். எனவே, ஃபில்டரை அவ்வப்போது சுத்தம் செய்ய மறக்காதீர்கள். இதை அதிக நாட்களுக்கு பயன்படுத்தாமல் இருந்தால் நன்மை தரும். |
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |