அடிக்கடி Back Pain வருதா? அப்போ இந்த உணவுகளை உடனே நிறுத்துங்க
தற்போது இருக்கும் மோசமான வாழ்க்கை முறை காரணமாக பலருக்கும் முதுகெலும்பு பலவீனம் பிரச்சினை வருகிறது.
இந்த சமயத்தில் ஆரோக்கியமான உணவுகள் மற்றும் பானங்கள் குடிப்பது அவசியம். ஏனெனின் மருந்துகளை விட உணவுகளே உடலுக்கு ஆரோக்கியம் கொடுக்கிறது.
முதுகெலும்பு வலிமையும் குறையும் பொழுது நேராக நிமிர்ந்து நிற்பதில் கூட பிரச்சினைகள் ஏற்படலாம். ஒவ்வொரு நாளும் இரவு தூங்க செல்வதற்கு முன்னர் சிலர் முதுகு வலியால் அவதிப்படுகிறார்கள்.
இந்த பிரச்சினை சில உணவுகள் சாப்பிடுவதால் ஏற்படுகிறது என மருத்துவர்கள் எச்சரிக்கிறார்கள்.
அந்த வகையில், முதுகெலும்புடன் தொடர்புடைய பிரச்சினைகள் வரும் பொழுது என்னென்ன உணவுகளை கட்டுக்குள் வைக்க வேண்டும் என்பதை பதிவில் பார்க்கலாம்.
1. புரதச்சத்து உணவுகள்
சிலர் எலும்புகளில் ஏதாவது பிரச்சினை வந்து விட்டால் புரதச்சத்து கொண்ட உணவுகளை அதிகமாக எடுத்துக் கொள்வார்கள். ஆனால் புரதச்சத்து அதிகமாக கொண்ட உணவுகளை சாப்பிடும் பொழுது அமிலத்தன்மை அதிகரிக்கும். இதன் விளைவாக கால்சியமும் சிறுநீர் வழியாக வெளியேறுகிறது. அதனால் என்ன சாப்பிட்டாலும் அளவுடன் இருப்பது நல்லது.
2. கார்பனேற்றப்பட்ட பானங்கள்
எலும்புகள் ஆரோக்கியமாக இருக்க வேண்டும் என நினைப்பவர்கள் கார்பனேற்றப்பட்ட பானங்கள் குடிப்பதை தவிர்க்க வேண்டும். ஏனெனின் பானங்களில் அதிகமான பாஸ்பேட் உள்ளடக்கம் இருக்கும். இது கால்சியம் சத்தை குறைத்து எலும்புகளை பலவீனமடையச் செய்யும்.
3. வாயு பிரச்சினைக்கான மருந்துகள்
வாயு தொடர்பான மருந்துகள் அதிகமாக எடுத்துக் கொள்பவர்களுக்கு முதுகுவலி ஏற்பட வாய்ப்பு உள்ளது. ஏனெனின் உடலுக்கு தேவையான கால்சியம், மெக்னீசியம் மற்றும் துத்தநாகம் போன்ற தாதுக்கள் அதிகமாக உறிஞ்சப்படும். இதனால் எலும்புகள் பலவீனமடைந்து முதுகு வலி பிரச்சினைகள் வரலாம்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |