ரூ.8000 விலையில் சூப்பரான ஸ்மார்ட்போன்! Itel நிறுவனத்தின் புதிய வெளியீடு
Itel Mobile என்பது சீனாவை தளமாகக் கொண்ட மொபைல் போன் உற்பத்தி நிறுவனமாகும்.
இது சீனாவின் Shenzhen ல் தலைமையகத்தைக் கொண்டுள்ளது.
அவர்களின் தயாரிப்புகள் முக்கியமாக ஆப்பிரிக்கா, தெற்காசியா, தென்கிழக்கு ஆசியா, ஐரோப்பா மற்றும் லத்தீன் அமெரிக்காவின் பகுதிகள் உட்பட பல்வேறு வளர்ந்து வரும் சந்தைகளில் விற்கப்படுகின்றன.
அவை முக்கியமாக குறைந்த பட்ஜெட் ஸ்மார்ட் போன்கள், feature போன்கள், தொலைக்காட்சி பெட்டிகள் மற்றும் மடிக்கணினிகளை வழங்குகின்றன.
இந்தியாவில் Itel நிறுவனத்தின் புதிய A70 ஸ்மார்ட்போன் ஆனது விரைவில் வரவுள்ளது. 128 அல்லது 256 GB memory உடன் வெளியிடப்படுவதாக தகவல் வந்துள்ளது.
A70 ஸ்மார்ட்போனானது ரூ. 8 ஆயிரம் முதல் கிடைக்கும். அதுமட்டுமின்றி இது நான்கு நிறங்களில் வரக்கூடும். 128 GB memory option உடனும் இந்த A70 model ஸ்மார்ட்போன் கிடைக்கும்.
இந்தியாவில் Itel A70 இன் வெளியீடு தேதி பற்றிய தகவல் எதுவும் வெளிவரவில்லை. Thick bezels, அகலமான display notch, முன்புறம் LED, flash, power மற்றும் volume button வலதுபுறமாகவும், இடதுபுறம் sim tray வுமாக இந்த ஸ்மார்ட்போன் design உள்ளது.இதற்குமுன்பே 4 GB Ram , 64 GB memory model இன் A05s ஸ்மார்ட்போனை Itel நிறுவனம் இந்திய சந்தையில் வெளியிட்டது.
இந்திய சந்தையில் Itel A05s ஸ்மார்ட்போனின் 2 GB Ram, 32 GB memory model கடந்த அக்டோபர் மாதம் அறிமுகம் செய்யப்பட்டது. ரூ. 6,099 என்ற விலையை உடையது அதே Itel A05s model இன் 4 GB version.