மனைவியின் நகையை விற்று பிரியாணி.. பசியால் வாடுபவருக்கு முஸ்லீம் சகோதரர் செய்த காரியம்
தமிழகத்தில் கோவை மாவட்டத்தில் முகமது ரபீக் என்ற நபர், தனது மனைவியின் நகையை விற்று சாலையோர மக்களுக்கு பிரியாணி செய்து கொடுத்து அவர்களின் பசியை போக்கி வருகின்றார்.
தற்போது கொரோனா தொற்று அதிகமாக பரவிவருவதால் இந்திய மாநிலமான தமிழகத்தில் முழுஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்த ஊரடங்கு காலத்தில் பசியினால் வாடும் சாலையோர மக்களுக்கு தன்னார்வல தொண்டர்கள் பலரும் தங்களால் முடிந்த உதவியினை செய்து வருகின்றனர்.
இந்நிலையில் பசியால் சாலையோரம் இருக்கும் நபர்களுக்கு இஸ்லாமிய சகோதரர் ஒருவர் செய்த உதவி அனைவரையும் நெகிழ வைத்துள்ளது.
பிரியாணி கடை நடத்தி வந்த இவர், தற்போது உணவு இல்லாமல் சாலையில் தவித்து வருபவர்களுக்கு பிரியாணி கொடுத்து வருகின்றார். இந்நிலையில் அவருக்கு பணப்பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது.
இதனால் சிறிதும் தயங்காத முகமது ரபீக் தனது மனைவியின் நகைகளை விற்று ஊரடங்கில் பசியால் வாடுபவர்களுக்கு பிரியாணி விநியோகம் செய்து வருகின்றார்.
மக்கள் மத்தியில் இந்த சம்பவம் பெரும் வைரலாகி வருவதுடன், குறித்த இஸ்லாமிய சகோதரரின் செயலுக்கு வாழ்த்துக்களை குவித்து வருகின்றனர்.