விஜய் தான் சங்கீதாவை ஒதுக்கி வைத்திருக்கிறாரா? ஜோதிடரின் கணிப்பு- நிறைவேறுமா?
"பிரபல ஜோதிடரின் பேச்சை கேட்டு கொண்டு மனைவியை நடிகர் விஜய் ஒதுக்கி வைத்திருக்கிறார்.." என பிரபலம் ஒருவர் பேசியது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.
நடிகர் விஜய்
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் தான் நடிகர் விஜய்.
இவர் நடிப்பில் கடைசியாக GOAT படம் திரைப்படம் வெளியானது. அதற்கு பிறகு இன்னும் ஒரே ஒரு படத்தில் மட்டும் விஜய் நடிக்கவிருக்கிறார். அந்த படத்தை இயக்குநர் ஹெச்.வினோத் இயக்கவுள்ளார்.
இப்படியொரு சூழலில் நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கியுள்ளார். அதன் முதல் மாநில மாநாடு சமீபத்தில் தான் நடந்து முடிந்தது.
மாநாடு நடக்கும் பொழுது விஜய்க்கு ஆதரவு வழங்கும் வகையில் அவரின் தொண்டர்களுடன் தாய், தந்தையும் கலந்து கொண்டார்கள்.
அதேசமயம் விஜய்யின் மனைவி மற்றும் பிள்ளைகள் கலந்து கொள்ளவில்லை. இதனால் பல விமர்சனங்கள் சமூக வலைத்தளங்களில் எழுந்து வருகின்றன.
ஜோதிடரின் கணிப்பு பலிக்குமா?
இந்த நிலையில் விஜய்யின் அரசியல் வாழ்க்கை குறித்து அவரின் ரகசியங்கள் குறித்தும் பிரபல பத்திரிகையாளர் சங்கர் பேசியிருக்கிறார்.
அதாவது, “ விஜய்- சங்கீதா இருவரும் நிரந்தரமாக பிரிந்துவிட்டார்களா என்பது சரியாக தெரியாது. ஆனால் ஜோதிடர் ஒருவர்,“விஜய் பிரம்மச்சரியமாக இருந்தால் தான் ஆட்சி கிடைக்கும்..” என கூறியுள்ளார். அந்த கடலூர் ஜோதிடரின் கணிப்பின் படி தான் விஜய் நடந்து வருகிறார் என சொல்லப்படுகின்றது.
அந்த ஜோதிடரின் கணிப்பு உண்மையாக இருந்தால் ஒருவேளை விஜய் மனைவியை பிரிந்திருக்க வாய்ப்புகள் உள்ளது. ஏனெனின் சினிமா பிரபலங்களின் வாழ்க்கையில் ஜோதிடர்கள் முக்கிய பங்காற்றுகிறார்கள். விஜய் போன்று கலைஞர் கருணாநிதி, எம்ஜிஆர் இவர்கள் யாரும் தனிப்பட்ட வாழ்க்கையை மறைத்து வைத்ததில்லை. எனவே சங்கீதா குறித்து விஜய் தெளிவுப்படுத்த வேண்டும்..” என பேசியுள்ளார்.
இந்த செய்தி விஜய் ரசிகர்களின் கவனத்திற்கு சென்றுள்ளது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |