குத்திக்காட்டும் சுனிதா.. ஓரம்கட்டப்படுவதாக புலம்பும் ஜாக்குலின்- நடந்தது என்ன?
பிக்பாஸ் வீட்டில் முக்கிய போட்டியாளராக இருக்கும் ஜாக்குலின் சுனிதாவின் சில நடவடிக்கையாக மன உடைந்து அழுகிறார்.
பிக்பாஸ் 8
பிரபல தொலைக்காட்சியில் ரசிகர்களின் மனதை வென்ற ரியாலிட்டி நிகழ்ச்சியில் ஒன்று தான் பிக்பாஸ்.
இந்த நிகழ்ச்சி தமிழில் இதுவரை 7 சீசன்களை வெற்றிகரமாக நிறைவு செய்துள்ளது.
கடந்த சீசன்களை இதுவரையில் நடிகர் கமலஹாசன் தொகுத்து வழங்கி வந்தார். திடீரென நிறைய படங்களில் கமல் கமிட்டாகி இருப்பதால் ஷோவில் இருந்து திடீரென விலகவதாக அறிக்கை வெளியிட்டிருந்தார்.
இந்த செய்தியை பிக்பாஸ் ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியாக இருந்தது. பின்னர் பிக்பாஸ் நிகழ்ச்சியின் ஆண்டவராக விஜய் சேதுபதி நியமிக்கப்பட்டார்.
இதற்கிடையில் பிக்பாஸ் சீசன் 8-ன் 3 ஆவது வாரம் சென்றுக் கொண்டிருக்கின்றது. இதற்கான போட்டிகளும் விறுவிறுப்பாக நடந்து கொண்டிருக்கின்றன.
புலம்பும் ஜாக்குலின்
இந்த நிலையில், மற்ற பிக்பாஸ் சீசன்களைப் போல இந்த சீசனிலும் குழு ஆட்சி ஆரம்பமாகியுள்ளது.
இதனை ரசிகர்களும் கவனித்து விமர்சித்து வருகிறார்கள்.
அதில், “ தன்னால் ஒவ்வொரு விஷயத்தையும் யோசித்து செயல்பட முடியவில்லை” என சௌந்தர்யாவிடம் ஜாக்குலின் அழுது கொண்டு புலம்கிறார். ஜாக்குலின் தற்போது அழும் காட்சி ப்ரோமோ வெளியிடப்பட்டுள்ளது.
கடந்த சீசனை விட இந்த சீசனில் போட்டியாளர்கள் மிகவும் சுறுசுறுப்பாகவும் நடப்பவைகளை தட்டிக் கேட்கும் வகையிலும் உள்ளனர்.
#Day25 #Promo4 of #BiggBossTamil
— Vijay Television (@vijaytelevision) October 31, 2024
Bigg Boss Tamil Season 8 - இன்று இரவு 9:30 மணிக்கு நம்ம விஜய் டிவில.. #BiggBossTamilSeason8 #VJStheBBhost #VijaySethupathi @mynanduonline #AalumPudhusuAattamumPudhusu #BiggBossTamil #Disneyplushotstartamil #VijayTelevision #VijayTV pic.twitter.com/X6jnPT9K0L
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |