சொகுசு கப்பலை இப்படித்தான் இயக்குகிறார்களா?
சென்னை துறைமுகத்தில், கார்டெலியா க்ரூய்சஸ்' நிறுவனத்தின், கடல் வழி 'எம்ப்ரெஸ்' சொகுசு கப்பல் பல அம்சங்களை கொண்டிருக்கிறது.
இந்த கப்பல் 700 அடி நீளமும், 11 தளங்களையும் கொண்டுள்ளது; 1,950 பயணியர் பயணிக்கலாம்; 650க்கும் மேற்பட்ட சிப்பந்திகள் உள்ளனர்.
இதுமட்டுமின்றி 10 உணவகங்கள், ஸ்பா, நீச்சல் குளம், விளையாட்டு மற்றும் பொழுதுபோக்கு வசதிகள், சொகுசு தங்கும் அறை, தியேட்டர் உள்ளிட்ட பல அம்சங்கள் உள்ளன.

மேலும், சென்னையில் இருந்து புதுச்சேரி மற்றும் விசாகப்பட்டினத்திற்கு சொகுசு கப்பலில், மக்கள் பயணம் செய்யும் வகையில், இப்புதிய சுற்றுலா திட்டம் வடிவமைக்கப்பட்டு உள்ளது.
இதுமட்டுமின்றி, இந்த சொகுசு கப்பலில் பயணிக்க குறைந்தபட்சம் 22 ஆயிரம் ரூபாய் முதல் அதிகபட்சம் 2.5 லட்சம் ரூபாய் வரை கட்டணங்கள் உள்ளன.
