காது குத்துவதற்குப் பின்னால் உள்ள அறிவியல் காரணம்... உங்களுக்கு தெரியுமா?
பொதுவாகவே நமது முன்னோர்கள் செய்த மற்றும் சொல்லி வைத்த ஒவ்வொரு விடயங்களுக்கும் பின்னால் ஒரு துள்ளியமான அறிவியல் காரணம் நிச்சயம் இருக்கும்.
அந்தவகையில் நாம் பின்பற்றும் பெரும்பாலான பழக்கவழக்கங்கள் அறிவியல் அடிப்படையைக் கொண்டுள்ளன, அவற்றை இழிவாகவும் அர்த்தமற்றதாகவும் கருவே முடியாது.
ஆண் குழந்தைகள் என்றும் பெண் குழந்தைகள் என்றும் வித்தியாசம் பார்க்காமல் காது குத்தப்படுவதை ஒரு சடங்காகவே இன்றளவும் சில சமூகத்தவர்கள் பின்பற்றுகின்றார்கள். இது வெறுமனே அழகுக்காகவா என்ற கேள்வி பெரும்பாலானவர்களிடம் இருக்கும்.
நிச்சயம் அழகுக்காக மாத்திரமல்ல, இதற்குப் பின்னால் உள்ள அறிவியல் காரணங்கள் குறித்த விரிவாக விளக்கத்தை இந்த பதிவில் பார்க்கலாம்.
அறிவியல் காரணங்கள்
பொதுவாக குழந்தையின் ஒற்றைப்படை ஆண்டுகளில் இந்த காது குத்தும் சடங்கு நிகழ்த்தப்படுகின்றது. இந்த செயல்பாட்டை நடத்துவதற்கு சில முக்கிய காரணங்கள் உள்ளன.
வெளிப்புற காதின் மேலோட்டமான பகுதியில் ஆஸ்துமா போன்ற நோய்களுடன் நெருக்கமாக தொடர்புடையதாக அறியப்படும் பல முக்கியமான அக்குபஞ்சர் மற்றும் அக்குபிரஷர் புள்ளிகள் உள்ளன.
இந்த அக்குபஞ்சர் புள்ளிகள் குத்தும்போது ஆஸ்துமாவுக்கு எதிரான நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவும். இந்த காரணத்திற்காகவே நமது முன்னோர்கள், அவர்களின் பாலினத்தைப் பொருட்படுத்தாமல், காதணிகளை அணிந்தனர்.
அதுமட்டுமன்றி குழந்தைகளின் மூளை வளர்ச்சி மற்றும் ஞாபக சக்தியை அதிகரிக்கத்தான் சிறு வயதிலேயே காது குத்தப்படுகிறது.
காது என்பது இடது மற்றும் வலது மூளையை ஒன்றிணைக்கும் மையப் பகுதியாக விளங்குவதால் காது குத்துவதன் மூலம் ஞாபக சக்தியை அதிகரிக்க முடியும் என்று அறிவியல் ஆதாரங்களும் இருக்கின்றன.
காது குத்தி தோடு அணிவதால் பெண்களுக்கு மாதவிடாய் காலத்தில் ஏற்படும் வலிகள் குறையும் என்றும் கூறப்படுகிறது. காது குத்துவதன் மூலம் மூளையின் செயல்திறன் அதிகரிக்கின்றது.
காது மடல்களில் துளையிட்டு காதணி போடும்பொழுது அதில் இருக்கும் செவித்திறன் நரம்புகள் தூண்டப்பட்டு காது கேட்கும் திறனும் அதிகரிக்கின்றது.
மேலும் காது குத்துமிடத்தில் இருக்கும் மர்ம புள்ளிகள் ஆண், பெண் இருவரின் இனப்பெருக்க ஆரோக்கியத்திற்கும் நல்லது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |