ஸ்மார்ட்போனில் ஸ்டோரேஜ் பிரச்சனையா? சரிசெய்ய சில வழிகள்
இன்றைய அவசரமான உலகில் ஸ்மார்ட்போன் இல்லாத நபர்களை காணவே முடியாது. சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் ஸ்மார்ட்போன் பயன்படுத்துகின்றனர்.
அவ்வாறு பயன்படுத்தும் போன்களில் மிகப்பெரிய பிரச்சனை தருவது ஸ்டோரேஜ் என்பதாகும். இந்த பிரச்சனை வருவதற்கான காரணம் நமது போன்களில் சேமிப்பிடம் குறைவாக இருப்பது தான்.
நாம் ஒரு நிறுவனத்தின் போனை வாங்கும் போது அதிக ஸ்டோரேஜ் ஸ்பேஸ் இருக்க வேண்டுமானால் நாம் அதிக பணத்தை கொடுக்க வேண்டும். இந்த சூழ்நிலை காரணமாக தான் பெரும்பாலான மக்கள் விலை குறைவான போன்களை வாங்குகின்றனர்.
இதன் பின் விளைவு தான் ஸ்டோரேஜ் full. பல ஆப்ஸ்களை பயன்படுத்த முடியாத சூழல் உருவாகிறது. போனின் வேகம் குறைவது இது போன்ற பிரச்சனைகளை தீர்க்க சில வழிகளை நாம் இப்போது பார்க்கலாம்.
ஸ்டேரேஜ்
நமது போன்களில் நாம் பயன்படுத்தாத அதிக செயலிகள் காணப்படும் . அந்த செயலிகளை நாம் எப்போதாவது ஒருமுறை பயன்படுத்திவிட்டு விட்டிருப்போம் .
அவ்வாறான செயலிகள் நமது ஸ்மார்ட்போன்களின் சேமிப்பிடத்தை நிரப்பி வைத்திருக்கும். இதனால், தேவையில்லாத செயலிகளை அழித்துவிட்டால், தேவையான கோப்புகளை சேமிக்க சேமிப்பிடம் இருக்கும்.
கேச்சி டேட்டா இது நாம் செயலிகளின் என்ன பயன்படுத்துகிறோம் என்பதை சேமித்து வைத்துக்கொள்ளும்.இவை அதிகப்படியான ஸ்டோரேஜ் ஸ்பேஸை எடுத்துக் கொள்கிறது. எனவே Settings பகுதிக்குச் சென்று, அதில் ஸ்டோரேஜ் எனும் ஆப்ஷனை கிளிக் செய்து, தேவையில்லாத ஃபைல்களை நீக்கலாம்.
ஆண்ட்ராய்டு யூசர்கள் ஃபைல்ஸ் கேச்சி செயலியை நிறுவி, அதன் வாயிலாக கேச்சி ஃபைல்களை நீக்கலாம். தேவையில்லாத படங்கள், வாட்ஸ்அப் மீம்கள், ஃபார்வேர்டு வீடியோக்கள் அல்லது படங்களை அழித்து விடுங்கள்.
மேலும், தேவையானவற்றை எக்ஸ்டர்னல் ஹார்ட் டிஸ்க் அல்லது கிளவுட் ஸ்டோரேஜில் சேமிக்கலாம். அதிகமான கோப்புகளை டவுன்லோடு செய்வோம்.
ஆனால், அவற்றின் தேவை என்பது ஒருசில நாள்கள் தான் இருக்கும். அதன் தேவை முடிந்த பின்னும் அதை கண்டுகொள்ளாமல் விட்டு விடுவோம். அப்படி இருக்கும் ஃபைல்களை கண்காணித்து, தேவையில்லாதவற்றை அழித்து விட வேண்டும்.
ஓடிடி தளத்தில் படத்தை ஆஃப்லைன் டவுன்லோடு செய்யும்போது, குறைந்த தரத்தை தேர்வு செய்யுங்கள். அப்படி தெளிவான ஹை-குவாலிட்டி தரத்தை தேர்வு செய்தாலும், அதை கண்டு களித்தவுடன் அழித்துவிடுங்கள். இப்படி செய்தால் சேமிப்பிடத்தை பாதுகாக்கலாம்.