அரிசி தான் சர்க்கரை நோய்க்கு காரணமா? விளக்கமளிக்கும் மருத்துவ நிபுணர்!
பொதுவாகவே தற்காலத்தில் பெரும்பாலான மக்கள் நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். வயதானவர்கள் மட்டுமின்றி இளைஞர்கள் மத்தியிலும் இதன் ஆபத்து நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
தற்போது நாட்டில் 10 கோடிக்கும் அதிகமானோர் சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். இது மட்டுமின்றி கோடிக்கணக்கான மக்கள் ஆபத்தில் உள்ளனர்.

இந்த நோயைத் தவிர்க்க, இரத்த சர்க்கரையை கட்டுப்படுத்துவது இன்றியமையாதது. நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு கணையத்தால் சுரக்கும் இன்சுலின் போதுமான அளவில் இருக்காது, அல்லது உடல் செல்கள் இன்சுலினை எதிர்க்கும்.
இதன் விளைவாக இரத்த குளுக்கோஸ் அளவுகள் அதிகரிக்கின்றன, இது தான் பொதுவாக உயர் இரத்த சர்க்கரை என்று குறிப்பிடப்படுகின்றது.

அதற்கு பல்வேறு வாழ்க்கை முறை பழக்கங்கள் உணவு பழக்கங்கள் என்பன முக்கிய காரணமாக இருக்கலாம்.
ஆனால், தினமும், அரிசி சாதம் சாப்பிடுவதால் தான் அதிக அளவில் சர்க்கரை நோய் வருவதாக ஒரு கருத்து கணிப்பு பெரும்பாலான மக்கள் மத்தியில் காணப்படுகின்றது.

இதில் எந்தளவுக்கு உண்மை இருக்கின்றது என்பது குறித்து மருத்துவர் மற்றும் ஊட்டச்சத்து நிபுணர் அருண்குமார் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் விரிவாக விளக்கம் கொடுத்துள்ளார்.
அவர் குறிப்பிடுகையில் அரிசிதான் சர்க்கரை நோய்க்கு காரணம் என்றால், அரசி சாதத்தை அதிகமாக எடுத்துக்கொள்ளும் இந்த ஒலிசா, சட்டிஸ்கர், அஸ்ஸாம், west Bengal, இங்கதானே சர்க்கரை நோய் அதிகமா இருக்கணும்? ஆனால் அப்படி இல்லையே என புள்ளிவிபரங்களுடன் வெளியிட்டுள்ள காணொளி இணையத்தில் கவனம் பெற்று வருகின்றது.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |