ஊற வைத்த உலர் திராட்சை தண்ணீர் குடிங்க... இந்த பிரச்சினைகள் கிட்டவே வராது
பொதுவாகவே ஊற வைத்த உலர் திராட்சையில் ஏராளமான மருத்துவ குணங்களும் ஆரோக்கிய நன்மைகளும் செரிந்து காணப்படுகின்றது.
உலர் திராட்சை நீர் என்பது திராட்சையை இரவு முழுவதும் ஊறவைத்து, பின்னர் வடிகட்டி, தயாரிக்கப்படும் ஒரு பானமாகும்.
இந்த பானம் செரிமானத்தை மேம்படுத்தவும், நச்சுகளை வெளியேற்றவும், பல்வேறு முக்கியமான ஊட்டச்சத்துக்கள் மற்றும் ஆக்ஸிஜனேற்றிகளை வழங்கவும் பயன்படுகிறது.
இது சுவையானதாகவும் தயாரிக்க எளிதானதாகவும் இருப்பது இதன் சிறப்பம்சமாகும். திராட்சை நீரின் சாத்தியமான நன்மைகள் தொடர்பான விரிவான விளக்கத்தை இந்த பதிவில் பார்க்கலாம்.
ஆரோக்கிய நன்மைகள்
இது குறிப்பாக பெண்களுக்கு கிடைத்த வர பிரசாதம் என்றால் மிகையாகாது. ஒரு சில பெண்களுக்கு மாதவிடாய் நாட்களில் அதிகப்படியான வலி இருக்கும். மேலும் ஒரு சிலருக்கு ஒழுங்கற்ற மாதவிடாய் சுழற்சி இருக்கலாம்.
மாதவிடாய் சார்ந்த இந்த இரண்டு பிரச்சனைகளுக்கும் ஊறவைத்த உலர் திராட்சை தீர்வு கொடுக்கும். ஊற வைத்த உலர் திராட்சையை காலையில் வெறும் வயிற்றில் சாப்பிட்டு வர, இரும்பு சத்து மற்றும் கால்சியம் குறைபாடுகளுக்கு சிறந்த தீர்வாக இருக்கும்.
உலர் திராட்சை நீர் கல்லீரலை மெதுவாக சுத்தப்படுத்துகிறது. இது நச்சுகளை நீக்குவதற்கும், நமது உடலில் உள்ள ஆபத்தான சேர்மங்களை உடைப்பதற்கு பொறுப்பான நமது கல்லீரல் நொதிகளின் சரியான செயல்பாட்டிற்கும் உதவுகிறது.
நீங்கள் அதிக அளவு உணவு சாப்பிட்டாலோ அல்லது மது அருந்தினாலோ, இந்த ஊரவைத்த உலர் திராட்சை தண்ணீர் கல்லீரல் பாதிப்புகளை சரிசெய்து அதன் ஆரோக்கியத்தை மேம்படுத்த பெரிதும் துணைப்புரிகன்றது.
அடிக்கடி வயிறு உப்புசம் அல்லது மலச்சிக்கலால் அவதிப்படுபவர்கள் தினசரி காலையில் வெறும் வயிற்றில் இந்த தண்ணீரை பருகிவந்தால், செரிமான பிரச்சினைகள் அனைத்தும் விரைவில் நீங்கும்.
உலர் திராட்சை தண்ணீர் இதய ஆரோக்கியத்திதை பாதுகாப்பதில் பெயர் பெற்றது. அவற்றில் உள்ள பொட்டாசியம் இரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்த உதவுகிறது, இதனால் இதய நோய் அபாயத்தைக் குறைக்கிறது.
மேலும் இதில் நார்ச்சத்து, பொட்டாசியம் மற்றும் ஆன்டிஆக்ஸிடண்ட்கள் ஆகியவை நிறைந்துள்ளமையால், தினமும் மிதமான அளவில் சாப்பிட்டு வந்தால் இதய நோய்களில் அபாயத்தை வெகுவாக குறைக்கின்றது.
ஊறவைத்த உலர் திராட்சை தண்ணீரில் வைட்டமின்கள் மற்றும் ஆன்டிஆக்ஸிடண்ட்கள் செரிந்து காணப்படுவதால், சரும ஆரோக்கியத்திற்கு நன்மை அளிக்கிறது.
இதில் உள்ள வைட்டமின் சி, வைட்டமின் ஈ, மினெரல்கள் மற்றும் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் சருமத்தை என்றும் இளமையாகவும் பளபளப்பாகவும் வைத்திருப்பதில் பெரும் பங்கு வகிக்கின்றது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |