வெள்ளை சர்க்கரையை விட வெல்லம் ஆரோக்கியமானதா? விளக்கும் இதய நிபுணர்!
பொதுவாகவே தற்காலத்தில் நாம் அதிகளவில் நுகரும் பல உணவுப்பொருட்கள் உடலில் சர்க்கரை அளவை வெகுவாக அதிகரிக்கின்றது.
சர்க்கரையை எடுத்துக் கொண்டால், அது ஒரு 'ஸ்லோ பாய்சன்'. இந்த சர்க்கரையே உடலில் ஏற்படும் பல்வேறு ஆரோக்கிய பிரச்சினைக்கு முக்கிய காரணம் என மருத்துவ நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.
ஆனால் சிலர் சர்க்கரை தான் பயன்படுத்த கூடாது என நினைத்து அதற்கு சிறந்த மாற்று எதுவாக இருக்கும் என்று தேடி அதை அதிகளவில் நுகர்ந்து வருகின்றார்கள்.
உதாரணத்துக்கு வெள்ளை சர்கரைக்கு பதிலாக நாட்டு சர்க்கரை, வெல்லம் போன்றவற்றை பயன்படுத்துவது ஆரோக்கியமானது என நினைக்கின்றார்கள்.
இது வெள்ளை சர்க்கரைக்கு பதில் நாட்டு சர்க்கரை அல்லது வேறு இனிப்புகளை நுகர்வது குறித்து இதய நோய் நிபுணரான டாக்டர் அரவிந்து துருவாசல் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கொடுத்துள்ள விளக்கம் குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.
டாக்டர் ரவிந்து துருவாசல் குறிப்பிடுகையில், "சர்க்கரையானது நமது உடலில் ஏற்படும் பல தொற்றுநோய் அல்லாத நோய்களுக்கு மிகவும் முக்கிய காரணமாக அமைகின்றது.
உதாரணமான உடல் பருமன், சர்க்கரை நோய், ஹைப்பர் டென்சன், கொழுப்பு கல்லீரல் நோய், பிசிஓடி போன்றவை அதிக சர்க்கரை நுசர்வின் காரணமாக தோன்றுகின்றது.
இதனால் இந்த சர்க்கரையை அனைவரும் ஒரு வில்லனாக பார்க்கின்றார்கள். அதோடு இதற்கு மாற்றாக நாட்டுச் சர்க்கரை, வெல்லம் போன்றவை ஹீரோவாக நினைக்கிறார்கள்.
ஆனால் உண்மையில் இவற்றில் ஹீரோ நாட்டுச்சர்க்கரையோ அல்லது வெல்லமோ அல்ல. இதில் உண்மையான ஹீரோ 'நோ சுகர் அல்லது லோ சுகர்' தான்" என்று கூறியுள்ளார்.
லோ சுகர்' என்பது சர்க்கரையாகவோ, வெல்லமாவோ அல்லது நாட்டுச்சர்க்கரையாகவோ கூட இருக்கலாம். நாம் எவ்வளவு குறைவாக எடுக்கிறோமோ, அது தான் ஆரோக்கியத்துக்கு உகர்ந்தது என விளக்கம் கொடுத்துள்ளார்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |