viral video: வாயை பிளந்தபடி தாக்கும் Hognose பாம்பு! நபரொருவரன் செயலை பாருங்க
நபரொருவர் வாயை பிளந்து தாக்க முற்படும் அரிய வகை ஹாக்னோஸ் பாம்பை அசால்ட்டாக வெறும் கைகளால் பிடித்து தூக்கும் மெய்சிலிர்க்க வைக்கும் காட்டியடங்கிய காணொளியொன்று தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.
வட அமெரிக்க கொலுப்ரிடே குடும்பத்தைச் சேர்ந்த ஐந்து வகையான விஷமற்ற பாம்புகளில் ஒன்றாக அறியப்படுவது தான் ஹாக்னோஸ் பாம்பு.
இது ஹெட்டரோடான் இனத்தை சேர்ந்தது.இந்தப் பாம்பு அதன் தலைகீழான மூக்கின் பெயரால் அழைக்கப்படுகிறது.
இந்த வகை பாம்புகள் தங்களின் மூக்கு பகுதியை தோண்டுவதற்குப் பயன்படுத்துகிறது. அச்சுறுத்தப்படும்போது, அது அதன் தலை மற்றும் கழுத்தை சமன் செய்து, பின்னர் உரத்த சீறலுடன் தாக்குகிறது, ஆனால் இவை அரிதாகவே கடிக்கிறது.
இவை எதிரிகளிடம் மாட்டுக்கொள்ளும் பட்சத்தில் உருண்டு, நெளிந்து, பின்னர் வாயைத் திறந்து நாக்கைத் தள்ளிக்கொண்டு, இறந்தது போல் நடிக்கும்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |