பூமியின் மீது மோத காத்திருக்கும் விண்கல்- அதிர்ச்சி கொடுத்த விஞ்ஞானிகள்
450*170 மீட்டர் அளவு கொண்ட விண்கல் பூமியை தாக்கினால் சுமார் 100 அணுகுண்டுகள் பூமியில் வெடித்த சேதத்தை ஏற்படுத்தும் என விஞ்ஞானிகள் தகவல் வெளியிட்டுள்ளனர்.
விண்கல் பாதிப்பு
சூரியனை சுற்றி வரும் விண்கல் ஒன்று நாளைய தினம் பூமி மீது மோதவுள்ளதாக நாசா விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
பொதுவாக விண்கல் என்பது பூமி போன்ற ஒரு கிரகத்தையே குறிக்கும். கிரகங்கள் உடைந்த பின்னர் மிச்சமாக இருக்கும் பாகங்கள் விண்கற்கள் என அழைக்கப்படுகின்றது. தன்னை தானே சுற்றிக்கொள்ளாத, வெவ்வேறு பாதைகளில் சூரியனை சுற்றி பயணிக்கும் தன்மை கொண்டவையாக விண்கல் பார்க்கப்படுகின்றது.
விண்கல் மற்ற கிரகங்களுடன் மோதும் பொழுது, அந்த கிரகத்தின் ஈர்ப்பு விசையால் தீப்பற்றி எரிய ஆரம்பிக்கும், இப்படி எரிந்து கொண்டே மற்ற கிரகங்களை தாக்குவதால் இதனை எரிகற்கள் என்கிறார்கள்.
இந்த நிலையில், 'ஸ்பேஸ் ராக் 99942 Apophis' என அழைக்கப்படும் விண்கல் ஒன்று பூமிக்கு அருகில் நாளைய தினம் வரவுள்ளதாக நாசா விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
இந்த விண்கல் 450*170 மீட்டர் அளவு கொண்டதாகவும், இது பூமி மீது விழுந்தால் சுமார் 100 அணுகுண்டுகள் பூமியில் வெடித்த சேதத்தை ஏற்படுத்தும் எனவும் குறித்த தகவல்கள் தெரிவிக்கின்றன.
குழப்பத்தின் கடவுளாக பார்க்கப்படுவது ஏன்?
“குழப்பத்தின் கடவுள்” என விஞ்ஞானிகளால் வர்ணிக்கப்படும் இந்த விண்கல் நாளை பூமியிலிருந்து சுமார் 19,000 மைல்கள் (சுமார் 30,500 கி.மீ) தூரத்தில் கடந்து செல்லும் என்றும் கூறியுள்ளனர்.
இப்படியொரு விண்கல் இருப்பதாக விஞ்ஞானிகள் கடந்த 2004ஆம் ஆண்டே கண்டறிந்துவிட்டதாகவும், 20 வருடங்களாக விஞ்ஞானிகளுக்கு பெரும் தலைவலியாக இருப்பதாகவும் கூறப்படுகின்றது.
நாளைய தினம் இந்த விண்கல் பூமிக்கு அருகில் வந்து செல்லும், ஆனால் புவி ஈர்ப்பு விசை இருந்தும் இது பூமியை தாக்காமல் சென்று விடும். விஞ்ஞானிகள் கணித்தது போன்று விண்கல் சென்று விட்டால் அடுத்து 100 வருடங்களுக்கு பூமியின் மீது விழாது என கணித்துள்ளனர்.
இந்த பாதையில் ஏதாவது பிரச்சினை ஏற்பட்டால் சேதம் ஏற்படலாம். அத்துடன் அபோபிஸ் விண்கல் பூமியின் ஈர்ப்பு விசையை கடந்து சென்றால், நிலநடுக்கம் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகரிக்கும் என சிறுகோள் விஞ்ஞானி ரொனால்ட்-லூயிஸ் பலூஸ் ஆராய்ச்சி குழு தெரிவித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |