கடலை மிட்டாய் தினமும் சாப்பிடுவது ஆரோக்கியமா? விளக்கும் மருத்துவர் அருண்குமார்
பொதுவாகவே தற்காலத்தில் பெரும்பாலானவர்கள் துரித உணவுகளின் அதிகரித்த நுகர்வால் பல்வேறு வகையான உடல் ஆரோக்கிய பிரச்சினைகளை எதிர்கொள்ள வேண்டிய நிலை காணப்படுகின்றது.
குறிப்பாக இனிப்பு பொருட்கள் என்றாால் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரையில் அனைவருக்கும் பிடித்தமான விடயமாகவே இருக்கின்றது.
அதிலும் குறிப்பாக சிலர் நான் கடைகளில் கிடைக்கும் பிஸ்கட்டுகளுக்கு பதிலாக ஆரோக்கியம் நிறைந்த கடலை மிட்டாய் தான் தினசரி சாப்பிடுகின்றேன் என தன்னை தானே திருப்திப்படுத்திக்கொள்கின்றார்கள்.
தினசரி இனிப்பாக கடலை மிட்டாய் சாப்பிடுவது எந்தளவுக்கு நல்லது? இது உடல் ஆரோக்கியத்தில் பாதக விளைவை ஏற்படுத்துமா? என்ற அனைத்து விதமான கேள்விகளுக்கும் ஊட்டச்சத்து நிபுணர் அருண்குமார் வழங்கும் விளக்கத்தை இந்த பதிவில் தெரிந்துக்கொள்ளலாம்.
கடலை மிட்டாய் சிறந்ததா?
கடலை மிட்டாய் ஆரோக்கியமானதா என்பதை தெளிவான விளங்கப்படுத்துவதற்காக ஊட்டச்சத்து நிபுணர் அருண்குமார், நிலக்கடலை, கடலை மிட்டாய், பிஸ்கட் ஆகிய மூன்றுடனும் ஒப்பிட்டு தெளிவான விளக்கம் கொடுத்துள்ளார்.
அதன் பிரகாரம், நிலக்கடலையை நேரடியான வறுத்து ஒரு சிற்றுண்டியான எடுத்துக்கொள்ளும் போது, இதில் சர்க்கரை துளியளவும் கிடையாது. மேலும் தோராயமான 100 கிராம் வறுத்த நிலக்கடலையில் 550 கலோரிகளும், 15 கிராம் மாவுச்சத்து, 25 கிராம் புரதம், 50 கிராமளவுக்கு கொழுப்பு சத்து கிடைக்கின்றது.
இதுவே கடலை மிட்டாயை ஒரு சிற்றுண்டியான எடுத்துக்கொள்ளும் போது, இதில் சர்க்கரை 40 தொடக்கம் 42 கிராம் அளவுக்கு சர்க்கரை காணப்படுகின்றது.மேலும் தோராயமான 100 கிராம் கடலை மிட்டாயில் 520 கலோரிகளும், 45-50 கிராம் மாவுச்சத்து, 15 கிராம் புரதம், 20 கிராமளவுக்கு கொழுப்பு சத்து கிடைக்கின்றது.
பிஸ்கட்டை ஒரு சிற்றுண்டியான எடுத்துக்கொள்ளும் போது, இதில் சர்க்கரை 38தொடக்கம் 40 கிராம் அளவுக்கு சர்க்கரை காணப்படுகின்றது.மேலும் தோராயமான 100 கிராம் பிஸ்கட்டில் 480 கலோரிகளும், 70 கிராம் மாவுச்சத்து, 5 கிராம் புரதம், 8 கிராமளவுக்கு கொழுப்பு சத்து கிடைக்கின்றது.
எனவே ஒப்பிட்டளவில் பிஸ்கட் சாப்பிடாலும் சரி, கடலை மிட்டாய் சாப்பிட்டாலும் சரி உடலுக்கு கிடைக்கும் சர்க்கரை அளவு கிட்டத்தட்ட ஒரே மாதிரியாகத்தான் இருக்கும். கடலை மிட்டாய் சப்பிடுவரு ஆரோக்கியமற்றது என்கின்றார்.
கடலை மிட்டாய் சாப்பிடும் பழக்கம் உடையவர்கள் நிலக்கடலையை சாப்பிடுவதே ஆரோக்கியமானது.
சிறியவர்கள் முதல் பெரியர்கள் வரையில் என்றோ ஒருநாள் கடலை மிட்டாய் சாப்பிடுவதில் பிரச்சினை இல்லை. தினமும் சாப்பிடுவது, அதிலும் ஒரு முழு பார் அளவுக்குச் சாப்பிடுவது நிச்சயம் ஆரோக்கியத்தைப் பாதிக்கும் என ஊட்டச்சத்து நிபுணர், மருத்துவர் அருண் குமார் குறிப்பிடுகின்றார்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |