பாசமாக நக்கும் நாய்களிடம் இருந்து இந்த ஆபத்து வருமாம்: என்ன ஆபத்து தெரியுமா?
அனைவரும் செல்லப்பிராணியாக வளர்க்கும் நாய்களின் குணம் வளத்தவர்களை நக்குவதாகும். நாய்கள் நம்மை நக்கினால் அது ஆரோக்கியமானதா என்பதை இந்த பதிவில் பார்க்கலாம்.
நாய்களின் நக்குதல்
நாய்கள் அவைகளின் நன்றியையும் பாசத்தையும் வளத்தவர்களிடம் வெளிக்காட்டும்போது வால் ஆட்டுவது, காலையே சுற்றி வருவது, முகத்தை நக்குவது போன்ற செயல்களில் ஈடுபடும்.
சில மனிதர்களுக்கு நாயிடம் இருந்து வரும் கோரை உமிழ்நீர் அதிக தீங்கை விளைவிக்குமாம். நாயின் எச்சில் மற்றும் மூக்கு துவாரம் ஆகிய பகுதிகளில் பாக்டீரியாக்கள் மற்றும் ஒட்டுண்ணிக்கள் ஏராளம் உண்டு.
ஜூனோஸ்கள் என்னும் தொற்று நோய்கள் நாய்களிடமிருந்து மனிதர்களுக்கு கடித்தல், நக்குதல்கள் மற்றும் கீறல்கள் மூலம் பரவுகிறது.
இதனால் எளிதில் பாதிப்பிற்கு உள்ளாகுபவர்கள் குழந்தைகள், வயதானவர்கள் மற்றும் கர்ப்பிணிப் பெண்கள் ஆவார்கள்.
உங்கள் நாய் சுகாதாரமாகவும், நோயின்றி நல்ல ஆரோக்கியமாக இருக்கும் பட்சத்தில் அதனால் தீங்கு ஏற்படும் வாய்ப்பு குறைவு. எனவே நாய்கள் நம்மை நக்குவது மிகவும் மோசமான விஷயமாகும்.