இரவு சாப்பிட்ட பின் ஐஸ்கிரீம் சாப்பிட்டால் என்ன நடக்கும் தெரியுமா?
இரவு சாப்பிட்ட பின் ஐஸ் கிரீம் சாப்பிட்டால் என்ன நடக்கும் என்று இந்த பதிவில் காணலம்.
ஐஸ் கிரீம்
பொதுவாகவே ஐஸ்கிரீம் என்றாலே எல்லாருக்கும் பிடிக்கும்.அதுவும் குழந்தைகளுக்கு ரொம்ப பிடிக்கும்.இதை நாம் வீட்டிலும் செய்யலாம்.
ஆனால் அதை விட நம் அளைவருக்கும் கடையில் வாங்குவதுதான் பிடிக்கும்.இதில் பல வகைகள் உள்ளன.சாக்லேட், ஸட்ராபெர்ரி,வெண்ணிலா என பல உள்ளன.

இது கோடை காலத்தில் ஒரு முக்கியமான உணவாக கருதப்படுகிறது.ஏனென்றால் இது நம் உடலுக்கு குளிர்ச்சியை தரும்.இது நாம் அளவுக்கு அதிகமாக சாப்பிட்டால் நமக்கு வயிறு வலி மற்றும் ஆரோக்கிய பிரச்சனைக்கு வழி வகுக்கும்.
ஏன் சாப்பிடக்கூடாது
இதை நாம் சாப்பிட்ட உடனே சாப்பிட்டால் இது நமக்கு செரிமான பிரச்சனைக்கு வழிவகுக்கும்.ஏனென்றால் இதில் அதிகமான கொழுப்பு மற்றும் சர்க்கரை உள்ளது.இது நம் இரத்தத்திற்குள் சென்று நம் இரத்த சர்க்கரை அளவை அதிகரிக்கிறது.இதன் மூலம் நமக்கு சோர்வு ஏற்படலாம்.
ஐஸ்கிரீம் சாப்பிடுவதால் வயிறு உப்புசம் வாயு பிரச்சனை மற்றும் அசொளகரியம் போன்ற பிரச்சனைகளை ஏற்படுத்தும்.மேலும் நம் செரிமானம் மிகவும் மெதுவாகவே நடக்கும்.ஏனென்றால் இது பால் பொருட்களுக்கு ஒவ்வாமை உள்ளவர்கள் சாப்பிடக்கூடாது.

ஐஸ்கிரீம் சாப்பிடுவதால் நமக்கு உடல் எடை அதிகரிக்கும் அபாயம் உள்ளது.ஏனென்றால் அதில் உள்ள கலோரிகள் மற்றும்சர்க்கரையினால் வரும்.இது நம் உடலில் அதிகமான கொழுப்பு சேருவதால் இது நிரீழவு போன்ற பிரச்சனை ஏற்படலாம்.
இது நம் தூக்கத்தையும் பாதிக்கும்.ஏனென்றால் அதில் உள்ள சர்க்கரை நம்மை மிகவும் சுறுசுறுப்பாக வைக்கிறது.இதனால் நமக்கு தூங்குவதில் பிரச்சனை ஏற்படலாம்.

இதை அளவோடு சாப்பிட்டால் எந்தவொரு பிரச்சனையும் வராது என்று மருத்துவர்கள் கூறுகின்றனர்.மேலும் தயிர் கொண்டு செய்யப்படும் சாப்பிடுவது நல்லது என்று கூறுகின்றனர்.ஆனால் தூங்குவதற்கு முன் சாப்பிடக்கூடாது.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |