குளிர் காலத்தில் தயிர் சாப்பிடலாமா? இவங்க மட்டும் சாப்பிட வேண்டாம்
குளிர்காலத்தில் தயிர் சாப்பிடுவதால் என்னென்ன நன்மைகள் ஏற்படுகின்றது என்பதை இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.
தயிர்
சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடும் உணவில் ஒன்று தான் தயிர் ஆகும். அதிகளவில் கால்சியம் சத்துக்கள் கொண்ட தயிர் எலும்பு ஆரோக்கியத்தில் முக்கிய பங்கு வகிக்கின்றது.
பாலிலிருந்து தயாரிக்கப்படும் தயிரை குளிர் காலத்தில் எடுத்துக் கொள்ளலாமா? சளி பிடிக்குமா? என்ற சந்தேகம் பலருக்கும் எழுந்திருக்கும்.
ஆதலால் குளிர் காலங்களில் தயிரை பலரும் சாப்பிடாமல் தவிர்த்தும் வருகின்றனர். ஆனால் உண்மை என்ன என்று இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.

குளிர்காலத்தில் சாப்பிடலாமா?
குளிர் காலத்தில் தயிரை தாராளமாக எடுத்துக் கொள்ளலாம். ஆனால் குளிர்சாதனப்பெட்டியில் வைத்து சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும். ஏனெனில் தயிர் இயற்கையில் குளிர்ச்சியானது என்பதால் தொண்டை வலி மற்றும் சளியை ஏற்படுத்துகின்றது.
சாப்பிடுவதற்கு அரை மணி நேரம் முன்பு தயிரை வெளியே எடுத்து வைக்க வேண்டும். முடிந்த வரையில் குளிர்காலங்களில் ஃப்ரிட்ஜில் தயிரை வைப்பதை தவிர்க்கவும்.
காலை மற்றும் மதியம் நேரத்தில் தயிரை தாராளமாக எடுத்துக் கொள்ளலாம். ஆனால் சைனஸ், இருமல், சளி பிரச்சனை உள்ளவர்கள் தயிரை குளிர்காலத்தில் தவிர்க்கவும்.
குளிர் காலத்தில் மனித உடலில் அதிக கலோரிகள் எரிக்கப்படுவதுடன், பசியும் ஏற்படும். இதனை கட்டுப்படுத்த தயிர் சாப்பிடலாம். அவை ஜீரணத்திற்கு உதவி செய்கின்றது.

| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |