இரவில் நாய் அழுதால் ஜாக்கிரதையா இருங்க..! ஏன்னு தெரியுமா?
பொதுவாக இந்து சாஸ்திரத்தின் அடிப்படையில் நம்மை சுற்றி நடக்கும் சில விஷயங்கள் அசுபமானதாக கருதப்படுகின்றன.
இந்த வகையில் குறிப்பாக இரவில் நாய் அழுவது மோசமான அறிகுறிகளின் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளன. இரவு நேரத்தில் வீட்டைச் சுற்றி நாய் குரைக்கும் சத்தம் கேட்டால் அது அபசகுனம் என இந்துக்களால் நம்பப்படுகிறது.
ஒரு நாய் அழுவது நமக்கு வரப்போகும் பிரச்சனைகளை முன்கூட்டியே உணர்த்துவதாக சாஸ்திரங்களில் நம்பப்படுகின்றது.நாய் அழுவதற்குப் பின்னால் உள்ள கெட்ட சகுனம் என்ன என்பது குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.
இரவில் நாய் அழுவதற்கு காரணம் என்ன?
வீட்டில் வளர்க்கும் நாயோ அல்லது தெருவில் வசிக்கும் நாயோ உங்கள் வீட்டின் முன் இரவில் அழுவது உங்கள் குடும்பத்தில் யாராவது ஒரு பெரிய நோயால் பாதிக்கப்பட போகின்றார்கள் என்பதன் அறிகுறியாக காணப்படுகின்றது.
ஒரு நாய் இரவில் அழுவது பெரிய துரதிர்ஷ்டங்களைக் முன்கூட்டியே அறிவிப்பதாக அமைகின்றது. நாய்கள் அழுவது ஊளையிடுதல் என குறிப்பிடப்படுகின்றது. இவ்வாறு நாய் தொடர்ச்சியாக இரவில் அழுவது பாரிய நிதி இழப்புபை ஏற்படுத்தும் அல்லது உயிரிழப்பை ஏற்படுத்தும் என நம்பப்படுகின்றது.
இரவில் ஒரு நாய் அழுவது வரவிருக்கும் சிக்கலைக் குறிக்கிறது. வீட்டிற்கு வெளியே நாய் அழும் நபரின் வீட்டில் சில அசுபச் செய்திகள் நிச்சயம் கேட்கும் என்பது ஐதீகம்.
வரவிருக்கும் இயற்கை நிகழ்வுகளை நாய்களால் முன்கூட்டியே உணர முடியும் என்றும் கூறப்படுகிறது. நிலநடுக்கம் போன்றவைகள் அதனால்தான் நாய்கள் முன்கூட்டியே அழத் தொடங்குகின்றன.
சில நம்பிக்கைகளின்படி, நாய்கள் தங்களைச் சுற்றி சில தீய சக்திகள் இருக்கும்போது அதிகமாக அழுகின்றன. வீட்டை விட்டு வெளியேறும் போது உங்கள் வீட்டின் முன் நாய் அழுவதைக் கண்டால், அது ஏதேனும் விரும்பத்தகாத சம்பவத்தின் அறிகுறி என்று கூறப்படுகிறது.
எனவே, வெளியே நாய் அழுவதைக் கண்டால், சிறிது நேரம் காத்திருந்து வீட்டை விட்டு வெளியேறுங்கள். மேலும் இரவில் உங்கள் வீட்டின் முன் நாய் அழுதால் சற்று எச்சரிக்கையாகவும் கவனமாகவும் இருக்க வேண்டியது அவசியம்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |