மொபைலில் சுத்தமாக சார்ஜ் தீர்ந்து விட்டால் 100 சதவீதத்திற்கு சார்ஜ் போடலாமா?
தற்போது சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் போன் பயன்படுத்துகின்றனர். கடினமான வேலைகளை கூட தற்போது இந்த மொபைல் போனில் சுலபமாக செய்து விடலாம்.
அந்த அளவிற்கு தொழில்நுட்பம் மிகவும் வேகமாக வளர்ந்துள்ளது. நாம் நமது தேவைக்கு பயன்படுத்தும் மொபைல் போன்களை பயன்படுத்த தெரிந்திருப்பது அவசியம்.
இப்போது இருக்கும் சிறுவர்கள் நாள் முழுக்க கேம் விளையாடுவது, படம் பார்ப்பது என ஸ்மார்ட்போன்களை இடைவிடாது பயன்படுத்துகின்றனர்.
பெரியோரும் யூடியூப், இன்ஸ்டாகிராம் பார்க்கின்றனர். இதனால் அடிக்கடி சார்ஜும் செய்து கொள்கின்றனர். போனை இப்படி சார்ஜ் செய்யும் போது சில விஷயங்களை கவனத்தில் கொள்ள வேண்டும்.
மொபைல் போனை 100 சதவீதம் சார்ஜ் போடலாமா?
மொபைல் போன் இல்லை என்றால் தற்போது பலரும் இயங்க மாட்டார்கள். அந்த அளவிற்கு தற்போது மனிதனின் வாழ்க்கையில் மொபைல் போன் ஒரு அவசியமான பொருளாக மாறிவிட்டது.
காலையில் எழுந்தது முதல் நைட் தூங்கும் போது கூட எல்லோரது கைகளிலும் மொபைல் தான். இப்படி நாள் முழுக்க வேலை செய்யும் மொபைல் போனுக்கு எவ்வளவு சார்ஜ் செய்ய வேண்டும் என்று பலருக்கும் தெரியாது.
நாள் முழுவதும் மொபைலை பயன்படுத்துவதால் பேட்டரி விரைவில் தீர்ந்து போகலாம். இந்த சூழ்நிலையில், சிலர் போனை 100 சதவீதத்திற்கு முழுமையாக சார்ஜ் செய்கிறார்கள்.
ஆனால் இது தவறு. போனில் லித்தியம் அயன் பேட்டரி உள்ளது. நாம் போனை முழுமையாக சார்ஜ் செய்வது பேட்டரி திறனில் எதிர்மறையான விளைவை ஏற்படுத்துகிறது.
பொதுவாக, தொலைபேசி பேட்டரி ஒரு சுழற்சியில் வேலை செய்கிறது. நீங்கள் போனை 0 முதல் 100 வரை முழுமையாக சார்ஜ் செய்தால், அது பேட்டரி ஆயுளைக் குறைக்கும் என கூறப்படுகின்றது.
இதனால் , பேட்டரி மிக விரைவாக சேதமடையலாம். ஆகையால், மொபைல் போனுக்கு 100 சதவீதம் சார்ஜ் செய்வதைத் தவிர்க்க வேண்டும். மொபைல் பேட்டரியை முழுமையாக சார்ஜ் செய்வதால் விரைவில் அதிக வெப்பமடைய வாய்ப்புள்ளது.
எனவெ போன் பேட்டரி 20 சதவீதத்தில் இருக்கும்போது மட்டுமே போனை சார்ஜ் செய்ய வேண்டும். மேலும், மொபைலில் 80 சதவீதம் சார்ஜ் இருப்பது போதுமானதாக கருதப்படுகிறது. இப்படி சார்ஜ் செய்து போனை பயன்படுத்தினால் மட்டுமே போன் நீண்ட நாள் அப்படியே இருக்கும்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |