ருத்ராட்சம் அணிந்துள்ளீர்களா? அப்போ இதை தெரிஞசுக்கோங்க ... மீறினால் கஷ்டம் வரும்
ருத்ராட்சம் அணிந்துகொண்டு செய்யக்குடாத செயல்களும் செல்லக்கூடாத இடங்களும் பதிவில் விரிவாக கூறப்பட்டுள்ளது.
ருத்ராட்ஷம்
ஜோதிடத்தில் ருத்ராட்சத்திற்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது. இது மிகவும் புனிதமான பொருளாக கருதப்படுகிறது. ருத்ராட்சம் சிவனின் கண்ணீரில் இருந்து உருவானதாகவும் நம்பப்படுகிறது.
ருத்ராட்சம் அணிவதன் மூலம் சிவபெருமானின் அருளைப் பெறலாம் என்பது ஐதீகம். மேலும் அனைத்து பிரச்சனைகளில் இருந்தும் நிவாரணம் பெறலாம் என்றும் கூறப்படுகிறது.
ருத்ராட்சம் ஒரு முகத்திலிருந்து இருபத்தி ஒரு முகம் வரை வேறுபடுகிறது. ஒவ்வொரு ருத்ராட்சத்திற்கும் தனி சிறப்பம்சம் உண்டு. அறிவியல் காரணத்தின் அடிப்படையில் ருத்ராட்சம் இயற்கையான ஆண்டிபயாடிக் தன்மை வாய்ந்தது.
இதனால், நோய் தொற்றுக்களில் இருந்து பாதுகாப்பதுடன், உடலின் நோய் எதிர்ப்பு சக்தியையும் அதிகரிக்க உதவும். அதிலும் இயற்கையாக நேர்மறை ஆற்றலை இது ஈர்க்கும்.
எனவே நாம் இந்த ருத்ராட்சத்தை அணிந்தால் நேர்மறை எண்ணங்கள் நம்மிடம் அதிகமாக ஈர்க்கப்படும்.
இதன்காரணமாக, மனதில் ஒருவித தெளிவும், நிம்மதியும் கிடைக்கும். இதை தவிர பெரியம்மை, காக்காய் வலிப்பு, கக்குவான் போன்ற நோய்களின் வீரியத்தையம் குறைக்குமாம்.
செய்யக்கூடாத தவறுகள்
ருத்ராட்சத்தை கருப்பு கயிற்றில் அணியக்கூடாது என சொல்லப்படுகிறது.
இறந்த வீடு அதாவது துக்கம் நிகழ்ந்த வீட்டிற்கோ, தகனம் செய்யும் இடத்திற்கோ செல்லும் போது ருத்ராட்சை அணியக்கூடாது.
தேபோல, படுக்கையறையிலும் ருத்ராட்சம் அணியக்கூடாது.
ஒவ்வொரு இரவும் தூங்கும் முன்பும், ருத்ராட்சை மாலையை கழற்றி தலையணைக்கு அடியில் வைத்துவிட்டு படுப்பது நல்லது
ருத்ராட்சம் அணியும்போது மது அருந்தக்கூடாது, சிகரெட் பிடிக்கக்கூடாது, இறைச்சி சாப்பிடக்கூடாது என சொல்லப்படுகிறது.
இதை மீறினால் ருத்ராட்சை தூய்மையற்றதாகிவிடுமாம்.
மேலும் உங்களுக்கு வரக்கூடிய நன்மையும் வராமல் போய்விடும்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |