Ghibli பயன்படுத்தியவர்களுக்கு வரும் ஆபத்து.. எச்சரிக்கும் நிபுணர்கள்- உண்மை என்ன?
Ghibli- style Ai image-ஐ பயன்படுத்திய பயனர்களுக்கு திருட்டு மோசடி நடந்து வருவதாக சமூக வலைத்தளங்களில் நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.
Ghibli வடிவமைப்பு
கடந்த சில நாட்களாக ChatGPT இன் புதிய அம்சத்தைப் பயன்படுத்தி உருவாக்கப்பட்ட Studio என்ற புதிய அம்சத்தினாால் Ghibli-பாணியில் உருவப்படங்கள், காட்சிகள் மற்றும் மீம்கள் உருவாக்கப்பட்டு வருகிறது.
OpenAI சமீபத்தில் Chat GPT-4o இல் புதுப்பிப்பு மூலம் அதன் மிகவும் மேம்பட்ட பட ஜெனரேட்டரை வெளியிட்டது.
இந்த புதிய அம்சம், புகழ்பெற்ற ஜப்பானிய திரைப்படத் தயாரிப்பாளர் ஹயாவோ மியாசாகியின் கையால் வரையப்பட்ட அனிமேஷன் ஸ்டைலில் போட்டோவை உருவாக்குகிறது.
ஆஸ்கார் விருது பெற்ற இவர் "ஸ்பிரிட்டட் அவே" மற்றும் "தி பாய் அண்ட் தி ஹெரான்" போன்ற படங்களை வடிவமைத்துள்ளார். சமூக வலைத்தளப் பயனர்கள் AI-உருவாக்கப்பட்ட படங்களை சுவாரஸ்யமாகக் கண்டாலும், ஒரு சிலர் Hayao Miyazaki இன் படைப்பை தவறாக பயன்படுத்தி வருகிறார்கள்.
அந்த வகையில், Ghibli-பாணியில் உருவாக்கப்படும் படங்களினால் என்னென்ன பிரச்சினைகள் வரப்போகிறது என்பதனை பதிவில் பார்க்கலாம்.
Ghibli- ஆல் வரும் ஆபத்துக்கள்
1. பயனர்கள் புதிய மற்றும் பிரபலமான AI இயக்கப்படும் கருவிகளில் தனிப்பட்ட படங்களை பகிரும் பொழுது அது சட்டப்பூர்வ பிரச்சினைகளை ஏற்படுத்தும்.
2. ஸ்டுடியோ கிப்ளி இமேஜ் ஜெனரேஷன் அம்சம் டிஜிட்டல் துறையில் தரவு பாதுகாப்பு மற்றும் தனிப்பட்ட தனியுரிமை முக்கியத்துவத்தை கவனிக்கவில்லையா? என்றும் கேள்விகள் எழுப்பப்படுகிறது.
3. OpenAI இன் முக தரவுகளை உள்ளிடும் பொழுது GDPR விதிமுறைகளுடன் பயனர்கள் எதிர்பார்க்காத அல்லது ஒப்புக்கொள்ளாத வழிகளில் சமர்ப்பிக்கப்பட்ட புகைப்படங்கள் திருடப்படலாம்.
4. ChatGPT இன் ஸ்டுடியோ கிப்ளி இமேஜ் ஜெனரேஷன் அம்சத்தைச் சுற்றியுள்ள உற்சாகம், டிஜிட்டல் யுகத்தில் விழிப்புணர்வு அவசியம்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |