சீரற்ற மாதவிடாய் பெரும் பாதிப்பை ஏற்படுத்தும்...
மாறிவரும் உணவுப் பழக்கவழக்கம், உடல் எடை போன்ற காரணங்களால் பெண்களுக்கு மாதவிடாய் சுழற்சியில் மாற்றங்கள் ஏற்படுகின்றது.
பெண்களுக்கு மாதவிடாய் சம்பந்தப்பட்ட அறிவு நிச்சயம் இருக்க வேண்டியது. அதிலும் கூடுதலாக விழிப்புணர்வு இருக்க வேண்டும்.
ஒரு பெண்ணுக்கு 28 நாட்களுக்கு ஒருமுறை தான் மாதவிடாய் சுழற்சி ஏற்படும்.

image - lokmat.com
அதாவது, 21-35 நாட்களுக்குள் மாதவிடாய் ஏற்படுவதுதான் வழக்கம். அதனடிப்படையில் சீரற்ற மாதவிடாய்க்கான அறிகுறிகள் என்னவென்று பார்ப்போம்...
- நீண்ட நாட்கள் வித்தியாசத்தில் மாதவிடாய் ஏற்படுதல்.
- மூன்று மாதங்களுக்கு மேலாக மாதவிடாய் ஏற்படால் இருப்பது.
- அதிகமாக அல்லது குறைவாக மாதவிடாய் ஏற்படுதல்
இதற்கான காரணங்கள்
- அதீத உடற்பயிற்சி
- மன அழுத்தம்
- ஹோர்மோன் கோளாறுகள்
- கர்ப்பப்பை கோளாறுகள்
- சத்தில்லாத ஆகாரம்
- உடல் எடை
- ஒரு சில மருந்துகள்

image - flo health
மாதவிடாய் நிற்கும் காலத்தை அண்மித்தல் பெண்களுக்கு 40வயதுக்கு மேல் மாதவிடாய் நிற்கும் தருணம்.
அந்த நேரத்தில் சீரற்ற மாதவிடாய் ஏற்படும். அதுமட்டுமில்லாமல் கர்ப்பம் தரிப்பதை தடுக்கும் மருந்துகளை உட்கொண்டாலும் இவ்வாறான பிரச்சினைகள் ஏற்படும்.
அதுமட்டுமில்லாமல் சரியான உறக்கமின்மை, உடல் எடை அதிகரிப்பு, சரியாக சாப்பிடாமல் இருப்பது போன்ற பிரச்சினைகள் இந்த மாதவிடாய் கோளாறுகளுக்கு காரணமாக இருக்கின்றது.

image - femina.in