இந்திய அணியின் அடுத்த பயணம்; இடம்பிடித்த சஞ்சு மற்றும் ராகுல் திரிபாதி - கேப்டனாக ஹர்திக் பாண்டியா தேர்வு!
இந்திய அணி தற்போது தென்னாப்பிர்க்கா அணியுடன் 5 டி20 போட்டிகளை விளையாடி வருகிறது. நடந்து முடிந்த 3 போட்டிகளில் இந்திய அணி 1 ஒரு வெற்றியும், தென்னாப்பிரிக்கா அணி 2 வெற்றியையும் பதிவு செய்துள்ளது.
இதனால், இனி வரும் போட்டிகளில் இந்திய அணி கட்டாயம் இனி வரும் போட்டிகளில் வெல்ல வேண்டிய சூழ்நிலையில் உள்ளது.
இந்த நிலையில், சௌத் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான டி20 போட்டிக்கு பிறகு இந்திய அணி இங்கிலாந்து நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொள்கிறது.
அதற்கு, முன்பு அயர்லாந்துடன் 2 டி20 போட்டிகளை விளையாட சுற்றுப்பயணத்தை மேற்கொள்கிறது.

இதற்காக இந்திய அணியில், ஹர்திக் பாண்டியா தற்போது அயர்லாந்து சுற்றுப்பயணத்தில் கேப்டனாக அறிவிக்கப்பட்டுள்ளார்.
ஜூன் 26 மற்றும் 28 ஆகிய தேதிகளில் இந்திய அணி அயர்லாந்து நாட்டில் விளையாட உள்ளதால, இந்த அணியில் பல இளம் வீரர்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

அதன்படி, ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்த சஞ்சு சாம்சன் மற்றும் ராகுல் திரிபாதி, தீபக் ஹூடா அணியில் இடம்பிடித்துள்ளனர். சூர்ய குமார் யாதவ் காயத்திற்க்கு பின் அணிக்கு திரும்புகிறார்.

இந்திய அணி
ஹர்திக் பாண்டியா (C), புவனேஷ்வர் குமார் (WC), இஷான் கிஷன், ருதுராஜ் கெய்க்வாட், சஞ்சு சாம்சன், சூர்யகுமார் யாதவ், வெங்கடேஷ் ஐயர், தீபக் ஹூடா, ராகுல் திரிபாதி, தினேஷ் கார்த்திக் (WK), யுஸ்வேந்திர சாஹல், அக்சர் படேல், ஆர் பிஷ்னோய், ஹர்ஷல் படேல் , அவேஷ் கான், அர்ஷ்தீப் சிங், உம்ரான் மாலிக்
India Squad
— BCCI (@BCCI) June 15, 2022
Hardik Pandya (C), Bhuvneshwar Kumar (vc), Ishan Kishan, Ruturaj Gaikwad, Sanju Samson, Suryakumar Yadav, Venkatesh Iyer, Deepak Hooda, Rahul Tripathi, Dinesh Karthik (wk), Yuzvendra Chahal, Axar Patel, R Bishnoi, Harshal Patel, Avesh Khan, Arshdeep Singh, Umran Malik